நாகலாந்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் 9 உடல்கள் மீட்பு
கோஹிமா: நாகலாந்தின் திமாப்பூர் அருகே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 9 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீசாரே சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாகலாந்து மாநிலம் திமாப்பூர் மாவட்டத்தில் சுமுகெடிமா பகுதியில் உருக்குலைந்த நிலையில் 9 பிணங்களை போலீசார் கண்டெடுத்தனர். 9 பிணங்களின் கண்களும் கட்டப்பட்டிருந்ததுடன், கைகளும் பின் நோக்கி கட்டப்பட்டிருந்தன.
அவர்களை அருகில் இருந்து தலையில் சுட்டதற்கான அடையாளம் இருந்தது. பிணங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காணமுடியவில்லை.
போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் விவரங்களை கொண்டு தற்போது மீடகபட்ட உடல்களுக்கு உரியவர்களை அடையாளம் காண முயற்சி செய்துவருவதாக கூறினார்.
இருப்பினும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications