மிக மோசமான வானிலை.... ரத்தானது நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம்!
சிக்கிம் மாநிலத்தில் மிகவும் மோசமான வானிலை நிலவி வருவதால் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்தானது.
சிக்கிம் : சிக்கிம் மாநிலத்தில் மிகவும் மோசமான வானிலை நிலவி வருவதால் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்தானது. டோக்லாமில் சீனா அத்துமீறி வருவதை அடுத்து அந்தப் பகுதியை பார்வையிட திட்டம் இட்டிருந்தார் புதிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் அங்கு நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக அவரது டோக்லாம் பயணம் ரத்தாகியுள்ள்ளது.
இந்தியாவின் புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றத்தில் இருந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய - சீன எல்லைப்பகுதியான சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லாவ் என்ற பகுதிக்கு சென்றுள்ளார் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளுடன் முக்கியமான சில ஆலோசனைகளை நடத்தினார்.

இந்தியாவின் முக்கியான எல்லைப்பகுதிகளில் சீனா சில நாட்களாக அத்துமீறி வருகின்றது. எனவே சீனா அத்துமீறும் எல்லையோர பகுதிகளுக்கு சென்று அந்நிய நாட்டின் ஊடுருவலை எப்படி முறியடிப்பது என்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மிகவும் முக்கியமான இந்த ஆலோசனையில் நிறைய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிக்கிம் பயணத்தில் அவர் டோக்லாம் பகுதிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு சென்று அவர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாட இருந்தார். ஆனால் அங்கு நிலவிய மிக மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாது என்பதால் அந்த பயந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் சென்றிருந்தார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆகியோருடன் பாதுகாப்பு குறித்த பல முக்கியமான ஆலோசனைளை நடத்தினார். அதுமட்டும் இல்லாமல் எல்லை ஊடுருவல் குறித்து தெரிந்து கொள்வதற்காக சியாச்சின் மலையில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களிடம் பேசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications