எனக்கு எதிராக சர்வதேச சதி.. களத்தில் இறங்கி கடவுள் காப்பாற்றி வருகிறார்.. புது வீடியோவில் நித்தி!
டெல்லி: தென் அமெரிக்காவின் ஈக்வடார் அருகே குட்டி தீவில் உள்ள நித்யானந்தா தனக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடைபெற்று வருவதாக ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பெங்களூருவை அடுத்த பிடதியில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையடுத்து வெளிநாடுகளிலும் கிளைகளை தொடங்கினார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நித்யானந்தாவுக்கு எதிராக உள்ளன. தற்போது அவர் தென் அமெரிக்காவின் ஈக்வடார் தீவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

முதன்மை மொழி
வெளிநாட்டில் இருக்கும் நித்தி, தற்போது தனக்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கியதாகவும் அதற்கு நித்யானந்தா கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நாட்டிற்கான தனி கொடி, பாஸ்போர்ட்டையும் முதன்மை மொழியாக ஆங்கிலத்தையும் அறிவித்துள்ளார்.

தேசதுரோக வழக்குகள்
கைலாசாவை சட்ட ரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தும் சட்டப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது தேசதுரோக வழக்குகள் பாயும் என கூறப்படுகிறது.

பயமுறுத்த
இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. இந்த உலகில் என்னை பயமுறுத்த எவராலும் முடியாது.

கடவுளே
என்னையும் எனது பீடத்தையும் கடவுளே களம் இறங்கி நேரடியாக காத்து வருகிறார். எனக்கு எதிராக அத்தனை செயல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. சர்வதேச சமூகம் அதை கவனித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications