நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் இன்று ஆண்மை "பரிசோதனை"!
பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு இன்று பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அவரைப் பரிசோதிக்க டாக்டர்கள் குழு தயாராக உள்ளது.
நித்தியானந்தா ஆண்மைப் பரிசோதனைக்கு வந்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துக் கூறி விட்டதால் அவரை பெங்களூர் மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.

ரஞ்சிதா - நித்தியானந்தா
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடம் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் நித்தியானந்தா. அப்போது ஆசிரம அறையில், நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்த்தி கொடுத்த புகார்
இந்த நிலையில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ்என்ற பெண் பிடதி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை நித்தியானந்தா பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியதாக கூறியிருந்தார். இதையடுத்து சிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆண்மைப் பரிசோதனைக்கு உத்தரவு
பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆண்களுக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல நித்தியானந்தாவுக்கும் சோதனை நடத்த ராம்நகர் கோர்ட் உத்தரவிட்டது.

வழக்கு மேல் வழக்கு போட்ட நித்தியானந்தா
ஆனால் நித்தியானந்தா இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்குப் போட்டார். அனைத்திலும் அவரது கோரிக்கை தள்ளுபடியாகி விட்டது.

இன்று ஆய்வு
இதையடுத்து இன்று நித்தியானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில், அவருக்கு ஆண்மைத் தன்மை உள்ளதா என்பதை அறியும் சோதனை நடைபெறவுள்ளது.

9 மணிக்கே
காலை 9 மணிக்கு சோதனை நடைபெறும் என்று தெரிகிறது. 4 டாக்டர்கள் இதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனைக்கு நித்தியானந்தா வருவாரா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications