தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ரூ.5 கோடி நிதி உதவி
பாட்னா: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ரூ.5 கோடி வழங்கியுள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் வட தமிழகம் தனித் தீவுகளாக சிதைக்கப்பட்டுள்ளது. முந்தைய அடைமழைக்கே ரூ8,000 கோடி நிதி உதவி தேவைப்படும் என மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார்.

இந்த புதிய பேய்மழை ஏற்படுத்திய சேதம் இன்னும் கூடுதலாக இருக்கக் கூடும். இந்நிலையில் கர்நாடகா, ஒடிஷா, டெல்லி மாநிலங்கள் தமிழகத்தின் துயரத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஏற்கனவே ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். பீகார் துணை முதல்வரான தேஜஸ்வி, தம்முடைய முதல் மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தமிழகத்துக்கு ரூ5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் பீகார் மாநிலம் இயற்கை பேரிடரை எதிர்கொண்டு வருகிறது. தமிழக மக்களின் துயரத்தில் பீகார் மக்களும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications