நிதீஷ் அலையில் சிக்கி சிதைந்து போன பரிதாபம்... ரொம்பக் கேவலமாக தோற்ற பாஜக!
பாட்னா: பீகாரில் கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை மிகக் கேவலமாக தோற்கிறது பாஜக. கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளில் கிட்டத்த பாதியை தற்போது இழந்து நிற்கிறது பாஜக.
கடந்த 2010ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி்யாக தேர்தலைச் சந்தித்தது பாஜக. ஆனால் இந்த முறை அது ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்து கட்சி ஆரம்பித்த முன்னாள் முதல்வர் மஞ்சி மற்றும் ராம் விஸால் பாஸ்வானின் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது.
ஆனால் எதிர்பார்த்த முடிவை அது பெற முடியவில்லை. மாறாக, இருந்த இடங்களையும் இழந்து உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

2010 தேர்தலில்
2010ல் பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் கை கோர்த்து ஓரணியாக நின்று போட்டியிட்டன. மறுபக்கம் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் தனியாக நின்றது. கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிட்டனர்.

மாறிய கூட்டணி
இந்தத் தேர்தலில் கூட்டணிகள் மாறின. பாஸ்வான் கட்சி மற்றும் நிதிஷுக்கு எதிராக மாறிய மஞ்சி ஆகியோரைக் கூட்டணி சேர்த்து போட்டியிட்டது பாஜக. மறுபக்கம், லாலு, காங்கிரஸுடன் கை கோர்த்து வலுவான கூட்டணியை அமைத்தது.

ஓசியில் மஞ்சள் குளித்த பாஜக
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 201 இடங்கள் கிடைத்தன. இதில் நிதீஷ் கட்சிக்கு 115 இடங்களும், பாஜகவுக்கு 91 இடங்களும் கிடைத்தன. மோடி அலையே இந்த. கூட்டணி வெற்றிக்கு என்று பாஜக தரப்பில் கூறிக் கொண்டனர். கூட்டணி ஆட்சி அமைந்த வேகத்தில் கூட்டணி தகர்ந்தது.

பெரும் தோல்வி
இந்தத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 91 இடங்களைப் பெற்ற அக்கட்சி இப்போது அதில் பாதியைத்தான் பெறுகிறது. 50 சதவீத இடங்களை அது இழந்துள்ளது. கூட்டணியாகவே இதுவரை 70 இடங்களில்தான் அது முன்னணியில் உள்ளது. இதில் பாஜக மட்டும் வெறும் 55 தொகுதி்களில்தான் முன்னணியில் உள்ளது.

மோசமான தோல்வி
நிதீஷ் குமார் தயவால்தான் கடந்த தேர்தலில் அது பெரும் இடங்களைப் பெற்றது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. மேலும் நிதீஷ் குமார்தான் பீகாரின் உண்மையான மக்கள் தலைவராக இருக்கிறார் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

லாலு, காங்கிரஸுக்கும் நிதீஷ் தயவால் வெற்றி
கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வாழ்வளித்த நிதீஷ் குமார் இந்த முறை லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸுக்கும் கை கொடுத்து தூக்கி விட்டுள்ளார். பீகாரின் அசைக்க முடியாத மக்கள் தலைவராக நிதீஷ் மாறியுள்ளார் என்பதையும் இந்தத் தேர்தல் நமக்குக் காட்டியுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications