ஜல்லிக்கட்டு.. பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க முடியாது.. உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் ஜனவரி 14க்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமனஅற செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை இதை தெளிவுபடுத்துகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யும்வகையில் கடந்த வருடம் ஜனவரி 7ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து, தமிழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.எப்.நாரிமன் முன்னிலையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று அல்லது இன்று தீர்ப்பு வெளியாகும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தீர்ப்பு தயாரிப்பு பணிகள் முடியாததால் பொங்கல் விடுமுறைக்கு முன்பாக தீர்ப்பை கோர்ட் வெளியிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தகவல் தொடர்பு அதிகாரி, ராகேஷ் ஷர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த வழக்கு தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய பெஞ்சால் விசாரிக்கப்பட்டது என்றும், நீதிபதி பானுமதி வழக்கை விசாரிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சில ஊடகங்களில் அதுபோன்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில் இதுபோன்ற அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வெளியாக வாய்ப்பில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications