மாணவியின் ஜீன்ஸ் பேண்ட் மெட்டல் பட்டனையும் கூட விட்டுவைக்காத 'நீட்' கொடூரம்!
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் ஜீன்ஸ் பேண்ட் பட்டனையும் கூட விட்டுவைக்காத பெருங்கொடுமை நிகழ்ந்துள்ளது.
திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள மெட்டல் பட்டன்களையும் அறுத்து எறிந்த அராஜகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு படுபயங்கர கெடுபிடிகளுடன் நடத்தப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்கள் தீவிரவாதிகளைவிட மிக மோசமாக நடத்தப்பட்டனர்.
மாணவிகளின் உள்ளாடைகளையும் கூட கழற்ற சொன்ன சம்பவம் கேரளாவில் அரங்கேறியது. கேரளாவின் கண்ணனூர் டிஸ்க் இங்கிலீஸ் மீடியம் என்ற பள்ளியில்தான் இந்த உச்சகட்ட கொடுமை நிகழ்ந்தது.

உள்ளாடையையும் கூட...
மெட்டல் டிடெக்டர் மூலம் இச்சோதனைகளை பள்ளி நிர்வாகங்கள் நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனால் உள்ளாடைகளில் மெட்டல் பட்டன்கள் இருந்ததால் பீப் சவுண்ட் கேட்டது. உடனே அவற்றையெல்லாம் கழற்றிவிட வேண்டும் என கெடுபிடி காட்டியுள்ளனர்.

ஜீன்ஸ் பேண்ட் மெட்டல் பட்டன்
இதே கண்ணனூர் பள்ளியில் மற்றொரு மாணவியின் ஜீன்ஸ் பேண்ட் மெட்டல் பட்டனால், டிடெக்டரில் பீப் சவுண்ட் கேட்டிருக்கிறது. உடனே அந்த ஜீன்ஸ் பேண்ட்டை கழற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகம் உத்தரவிட்ட பெருங்கொடுமை நிகழ்ந்துள்ளது.

புதிய பேண்ட்
இதனால் செய்வதறியாது தவித்த மாணவியின் தந்தை ராஜேஸ் நம்பியார், பிளேடு மூலமாக ஜீன்ஸ் பேண்ட் மெட்டல் பட்டனை அறுத்து வீசியுள்ளார். பின்னர் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடைக்குப் போய் புதிய பேண்ட் வாங்கி கொடுத்து மகளை தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.

உளவியல் யுத்தம்
இத்தகைய அராஜகங்களால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட உளவியல் தாக்குதல் இது என்பதே பொதுவான கருத்து.


Click it and Unblock the Notifications
