மேகேதாட்டுவில் அணை கட்ட சட்ட பிரச்சனைகள் ஏதுமில்லை – கர்நாடகா முதல்வர் சித்தராமையா
மைசூரு: மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தில் சட்டரீதியாக எந்த் பிரச்சனையும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சாம்ராஜ்நகரில் ஏரி, குளங்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் சித்தராமையா மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார்.
அப்போது அளித்த பேட்டியில் அவர், "கர்நாடகத்தில் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏரி, குளங்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் திட்டம் தொடங்கப்படுகிறது.

முதற்கட்டமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கிறேன். மேலும் மாநிலத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் ஆறு, அணைகளில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வாய்ப்பு உள்ளதோ, அந்த இடங்களில் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
கர்நாடக-தமிழக எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 2 அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணை கட்டும் திட்டத்திற்கு சட்டரீதியான எந்த பிரச்சினையும் இல்லை.
அரசியல் லாபத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள்இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்த அணை கட்டும் வரைவுதிட்ட அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. முதலில் வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications