ஸ்டாலின் கூறியும் கேட்காத அகிலேஷ் யாதவ்.. காங்., ‛கை’விட்டு மம்தாவுடன் புதிய கூட்டணி முடிவு! பின்னணி
சென்னையில் தனது 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
கொல்கத்தா: உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும் உள்ள அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லியும் கேட்காமல் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை புறம்தள்ளிவிட்டு புது கூட்டணிக்கு மம்தா பானர்ஜியுடன் அடித்தளம் போட்டுள்ளதன் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான ஸ்டாலின் இந்த மாத தொடக்கத்தில் தனது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இந்த விழாவையொட்டி இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்ஙகள் கொண்ட கட்சி தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி சென்னை நந்தனத்தில் திமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்(உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவர்), ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்(பீகார் துணை முதல்வர்), காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
இந்த 4 தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களையும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தின்போது மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை முன்வைத்து கருத்து தெரிவித்து இருந்தனர். மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, ‛‛2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடம் கூட வழங்கவில்லை. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை, ஒன்றிணைந்து அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

ஒன்றிணைய கூறிய ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‛‛இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. எனது பயணம் நீண்ட நெடிய பயணம். 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம்" என்றார். இதன்மூலம் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார். மேலும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார்.

அகிலேஷ் யாதவ் ட்விஸ்ட்
இந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மட்டும் பாராட்டி பேசினார். மாறாக அவர் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் என்பதை அகிலேஷ் யாதவ் இருந்தபோதே முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதன்மூலம் மேடையில் இருந்த தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என ஸ்டாலின் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் இந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றதால் அவரும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பாஜகவை எதிர்க்கலாம் என கருதப்பட்டது. தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

ரூட்டை மாற்றிய அகிலேஷ் யாதவ்
ஆனால் தற்போது அகிலேஷ் யாதவ் தனது ரூட்டை மாற்றி உள்ளார். நேற்று அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பாஜக, காங்கிரஸ் இல்லாத வகையில் புதிய கூட்டணியை உருவாக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடம் சமமான தூரத்தை கடைப்பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை அகிலேஷ் யாதவே உறுதி செய்தார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் கூறியும் கூட அகிலேஷ் யாதவ் மாற்று பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளார். மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பாத நிலையில் அகிலேஷ் யாதவ் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார். மேலும் இன்னும் சில நாட்களில் மம்தா பானர்ஜி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சந்திக்க உள்ளார். இதன்மூலம் அவர் தனியாக கூட்டணி அமைக்க உள்ளதில் மீண்டும் தீவிரம் காட்ட உள்ளார்.

காரணம் என்ன?
இந்நிலையில் தான் மம்த பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேராமல் விலகுவதன் பின்னணியில் உள்ள என்ன? என்பதற்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் தற்போது மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தங்களுக்கு எந்த லாபமும் இருக்காது. மாறாக கூட்டணி அமைந்தால் காங்கிரஸ் கட்சி தன்னை முன்னிலைப்படுத்தும். மேலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்க முயற்சிக்கும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதன் மூலம் அவர்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் பலம் அதிகம் என அவர்கள் நம்புகின்றனர். மாறாக, புதிய அணியை கட்டமைத்து மம்தா பானர்ஜி தன்னை தனியாக முன்னிலைப்படுத்த முடியும். இந்த காரணங்களால் தான் அவர்கள் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க நினைக்கின்றனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கூட 2024ல் மத்தியில் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்து ஓரணியில் சேர்ந்து செயல்படுவது தான் சரியானதாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications