குறுக்கே வந்த கூட்ஸ் வண்டி.. '2 பெட்டிகளில் இருந்த யாரும் உயிர்பிழைக்கவில்லை'.. கோரமண்டல் பயணி ஷாக்
புவனேஸ்வர்: '2 பெட்டிகளில் இருந்த யாரும் உயிர்பிழைக்கவில்லை' - கோரமண்டல் ரயிலில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி வெங்கடேசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 233 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ₹50,000 நிவாரணத்தை ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் ரயில் விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர்ந நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்து.

ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தமிழக அரசு சார்பில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி வெங்கடேசன் கூறுகையில், 2 பெட்டிகளில் இருந்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் வெங்கடேசன் பேசுகிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். பாலசோர் ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணி 15 நிமிடத்திற்கு வந்தது. பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிராசான 15 நிமிடங்களில் டெல்லியில் இருந்து தூரந்திரோ எக்ஸ்பிரஸ் எதிர் திசையில் வந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது பக்கத்தில் ஒரு கூட்ஸ் (சரக்கு ரயில்) வண்டியும் வந்தது.
இரண்டு ரயிலுக்கு நடுப்புறம் கூட்ஸ் வண்டி புகுந்ததால், இந்த இரண்டு ரயில்களும் விபத்தில் சிக்கின. கிட்டத்தட்ட இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏராமானனோரை மீட்கும் பணி நடந்து வருகிறது. நான் பி 7 இல் இருந்தேன். பி 6 வரை அனைத்து பெட்டிகளும் முழுமையாக விபத்தில் சிக்கியது. இரண்டு பொதுப்பெட்டியில் இருந்த அனைவருமே இறந்துடாங்க.. யாருமே தப்பிக்கல. நான் உடனே எங்க டீம் (ராணுவத்திற்கு)க்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் மீட்பு பணியில் இறங்கினர். இந்த பணி விடிய விடிய நடக்கும். நிலைமை சரியாக இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications