கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு.. ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு ஜேட்லி பதிலடி
டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் அரசியல் பழிவாங்கும் போக்கு எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகனான, கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இரு வாரங்கள் முன்பு நாள் முழுக்க ரெய்டுகளை நடத்தினர்.

இதுகுறித்து சில தினங்கள் முன்பு, கருத்து தெரிவித்திருந்த சிதம்பரம், இந்த ரெய்டு தனக்கு குறி வைத்து நடத்தப்பட்டதாகவும், ரெய்டின்போது எதுவுமே கிடைக்கவில்லையே என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகநடைபெறும் வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது இல்லை என பதிலளித்தார்.
மேலும், இந்தியாவின் பொருளாதாரத்தை நிலையாக நிறுவியதில் கடந்த 3 ஆண்டு கால பாஜக அரசுக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், ஊழல் ஊறிப்போயுள்ள சிஸ்டங்களை சரி செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் ஜேட்லி தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியின் வேகம் இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் குறைந்த அளவில்தான் உள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications