3வது அணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடம் இல்லையே: அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டம்
டெல்லி: 3வது அணிக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கூறிய கருத்தை கடுமையாக ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபால் ராய், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மூன்றாவது அணிக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்றார்.

ஆனால் கோபால் ராயின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இது தொடர்பான கருத்தை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
3வது அணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே முற்றிலும் இடம் இல்லை. தேர்தலுக்கு முன் இது போன்று திடீர் அதிர்வுகளை ஏற்படுத்தும் மலிவான விளையாட்டுகளில் ஊடகங்கள் ஈடுபடவேண்டாம்
இவ்வாறு கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சி ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எந்த ஒரு கூட்டணிக்கோ அல்லது அணிக்கோ ஆதரவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மூன்றாவது அணி ஒரு போதும் மாற்றாக இருக்காது என்றும் நாட்டில் நிலவும் ஊழல் அரசியலின் ஒரு பகுதியாகத்தான் மூன்றாவது அணி இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியாக நம்புகிறது என்று தெரித்துள்ளது.












Click it and Unblock the Notifications