சோம்நாத் கோவிலுக்குள் நுழையும் பிற மதத்தினர் சிறப்பு அனுமதி பெற உத்தரவு!
அகமதாபாத்: குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவிலுக்குள் நுழையும் பிற மதத்தினர் கட்டாயம் சிறப்பு அனுமதி பெற்றே நுழைய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவில் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்று. வரலாற்று காலங்களில் பல முறை படையெடுப்புக்குள்ளானது.
தற்போதைய சோம்நாத் கோவிலானது 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

இந்தக் கோவிலின் டிரஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அத்வானி, கேசுபாய் படேல் என மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இக்கோவிலில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்த கோவிலின் அறக்கட்டளை செயலர் பி.கே.லஹிரி கூறியதாவது:
சோம்நாத் கோவிலுக்கு வருவோரை ஒழுங்குபடுத்தவும் கோவிலின் பாதுகாப்புக்காகவும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக யாரை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பதில் பாதுகாவலர்கள் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.
பர்கா அணிந்த ஒரு பெண் கோவிலுக்குள் நுழைய முயன்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அதனால் இந்து அல்லாத பிற மதத்தவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கும் முன் சோதனை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்களில் இந்துக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. பார்சிகளின் வழிபாட்டு தலத்துக்கு பார்சி அல்லாதவர் செல்ல முடியாது. மெக்கா நகரில் இந்துக்கள் நுழைய முடியாது.
இதனால் சோம்நாத் கோவிலுக்குள் நுழைய பிற மதத்தினர் கட்டாயம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அவர்கள் என்ன நோக்கத்துக்காக கோவிலுக்குள் செல்கிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.
இவ்வாறு பி.கே.லஹிரி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications