வடக்கு ரயில் பாவங்கள்.. பயணிகள் முன்னிலையில் ரயிலில் கேஷ்வலாக மது அருந்திய வட மாநில இளைஞர்
நாகர்கோவில்: வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணத்தில் ஏராளமான சம்பவங்கள் நடக்கும். சில சம்பவங்கள் நகைச்சுவையாகவும், சில சம்பவங்கள் அட்ராசிட்டியாகவும் இருக்கும். பரிதாபங்கள் சேனலின் வடக்கு ரயில் பாவங்கள் வீடியோ போல, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு மாநில இளைஞர் சக பயணிகள் முன்னிலையில் மது அருந்தி சர்வ சாதாரணமாக பயணித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நபரின் நடவடிக்கையால் சக பயணிகள் ஆத்திரமடைந்தனர்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமே இல்லை. கட்டுமான தொழில் தொடங்கி உணவு தொழில் வரை அனைத்து துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதால் வட மாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை நோக்கி அதிகளவு பயணிக்கிறார்கள்.

வடக்கு ரயில் பாவங்கள்
வேலைக்காக வரும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலும் ரயிலை தான் பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு ரயிலிலும் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் முன்பதிவில்லா டிக்கெட்டில் தான் பயணம் செய்வார்கள். வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணம் அனுபவங்களை வடக்கு ரயில் பாவங்கள் என்கிற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் கடந்தாண்டு வெளியிட்டது.
லக்கேஜ் வைக்கும் இடத்தில் அமர்வது, கூலி குறைவாக கேட்பது, சத்தமாக பாட்டு வைப்பது, பான்பராக் போட்டு ரயிலை சுகாதாரமின்றி வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்காக கோபி, சுதாகரை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் கூட பாராட்டியிருந்தனர்.
ரயிலில் மது அருந்திய இளைஞர்
இந்நிலையில் பரிதாபங்கள் வீடியோவை விஞ்சுமளவுக்கு ஒரு வட மாநில தொழிலாளர் ரயிலில் அட்ராசிட்டி செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில இளைஞர் ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் மது அருந்தியுள்ளார். ஜன்னல் ஓரம் ஒற்றை இருக்கையில் சம்மனம் போட்டு அமர்ந்து பாட்டிலை திறந்து, பேப்பர் கப்பில் மது ஊற்றி தயக்கமே இல்லாமல் அருந்தி கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலில் மது அருந்த கூடாது என்று கண்டித்துள்ளனர். ஆனால் பயணிகள் சொல்வதை கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் தொடர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். இதை ரயிலில் பயணித்த பயணிகள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பயணிகள் ஆத்திரம்
'டேய்.. இவ்வளவு சொல்லியும் சரக்கு அடிச்சுட்டு இருக்க. டிரெயின்ல சரக்கு அடிக்கலாமா. சரி நீ அடி பார்த்துக்கலாம்." என்று பயணிகள் கூற, அந்த இளைஞர் எதுவும் புரியாதவர் போல கை மற்றும் தலையை அசைத்தபடி இருந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த வட மாநில இளைஞரை தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications