Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் புதிய கட்சியாக உருவெடுக்க இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் புதிய கட்சியாக உருவெடுக்க இருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.

கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது. அங்கு சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

என்ன போசாட்டம்

என்ன போசாட்டம்

இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் வங்கதேசத்துடன் உறவு மொத்தமாக பாதிக்கப்படும். இந்த போராட்டம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அசாமில்தான் இந்த போராட்டம் அதிகமாக நடந்து வருகிறது.

அசாம் அமைப்பு

அசாம் அமைப்பு

அனைத்து அசாம் மாணவர்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்பும் இதில் முன்னிலை வகிக்கிறது. இந்த போராட்டம் காரணமாக அசாம் மாணவர்கள் அமைப்பு இந்தியா முழுக்க புகழ்பெற்றுள்ளது. இந்த அமைப்பிற்கு பலர் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

பெரும் ஆதரவு

பெரும் ஆதரவு

இவர்களுக்கு ஏஐயுடிஎஓ, அனைத்து வடகிழக்கு மாணவர் சங்கம், கிர்சாக் முக்தி சங்கரம் சமிதி, அருனாச்சல பிரதேச மாணவர் சங்கம், நாகா மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதேபோல் இடதுசாரி அமைப்புகளான எஸ்எப்ஐ, டிஒய்அப்ஐ, ஏஐடிடபிள்யுஏ, ஏஐஎஸ்எப், ஐபிடிஏ ஆகிய அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கட்சி ஆசை

கட்சி ஆசை

இந்த நிலையில் அசாம் மாநில மாணவர்கள் அமைப்பு பெரும்பாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற முடிவில் இருக்கிறது. அசாமில் ஷில்பி சமாஜ் எனப்படும் கலைஞர்கள் சங்கத்துடன் சேர்ந்து மாணவர்கள் அமைப்பு அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

மக்களின் கருத்தை கேட்டுவிட்டு இது தொடர்பாக முடிவு செய்வோம் என்று அசாம் மாநில மாணவர்கள் சங்க தலைவர் தீபங்கா நாத் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக சிந்தித்து வருகிறோம். எல்லோரிடமும் ஆலோசித்துவிட்டு முடிவை கண்டிப்பாக அறிவிப்போம்.

பாஜக முடிவு

பாஜக முடிவு

பாஜகவை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அசாம் மக்களை அசாம் கனபரிஷத் கட்சி ஏமாற்றிவிட்டது. எங்களுக்காக காங்கிரஸ் கட்சியும் உடன் நிற்கவில்லை. அதனால் நாங்களே கட்சி தொடங்கலாம் என்று இருக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

டெல்லி எப்படி

டெல்லி எப்படி

இதற்கு முன் டெல்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போராடினார்கள். அந்த போராட்டத்திற்கு பின்தான் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். தற்போது அதேபோல் மாணவர்கள் கட்சி ஒன்றை தொடங்க வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+