தலித் குழந்தைகள் எரிக்கப்பட்டதை "நாய் கடிப்பதோடு" ஒப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்...

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானாவில் தலித் குழந்தைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை நாய் கடிப்பதுடன் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியை அடுத்து உள்ள ஹரியானாவின் சோன்பேட்டில் உயர்ஜாதி பிரிவினர், தலித்துகள் வீட்டின் மீது தீ வைத்தனர். இதில் வைபவ் என்ற இரண்டரை வயது குழந்தையும், திவ்யா என்ற 11 மாத குழந்தையும் உயிரிழந்தன. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Not government's fault if one stones a dog: VK Singh on Dalit kids Killings

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், அனைத்துக்கும் மத்திய அரசையே குறைகூறாதீர்கள்.

நாட்டுல நாய் கடித்தால் கூட அதுக்கும் மத்திய அரசுதான் காரணம் எனக் கூறுவீர்களா? தனிப்பட்ட முன்விரோதத்தால் சோன்பேட் சம்பவம் நடந்தது என்று கூறியிருந்தார்.

வி.கே.சிங்கின் இந்த கருத்து கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. தலித் குழந்தைகளை நாய்களோடு எப்படி ஒரு அமைச்சர் ஒப்பிட்டுப் பேசலாம்? அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் வி.கே.சிங்குக்கு எதிராக கொந்தளித்து பதிவுகள் போட்டுள்ளார்.

இதனிடையே தாம் தலித் குழந்தைகளை நாய்களோடு ஒப்பிட்டுப் பேசவில்லை.. அப்படிப் பேசியிருந்தா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+