வால்மீகி பற்றி சர்ச்சை பேச்சு.. இந்தி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி கைது!
ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புகாரில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ராக்கி சாவந்தை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்தி பட உலகில் தனது படுபயங்கர கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து லூதியானா நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பியது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதை ராக்கி சாவந்த் தவிர்த்து வந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் கடந்த மார்ச் 9-ம் தேதி ராக்கி சாவந்திற்கு கைது வாரன்ட் பிறப்பித்து லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பஞ்சாப் போலீசார் இன்று மும்பை வந்தனர். அவர்கள் ராக்கி சாவந்தை இன்று கைது செய்தனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications