ரெட்டி வீட்டு திருமணத்தில் அமைச்சர்கள்.. அதுதெரியாமல் போராடிய காங். மாணவர் சங்கம்!
ஜனார்த்த ரெட்டி வீட்டு ஆடம்பர திருமணத்தில் பாஜகவின் பங்கேற்பதை கண்டித்து காங். மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு: சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி வீட்டு திருமணத்தில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர். ஆனால் இது தெரியாமல் ரெட்டி வீட்டு ஆடம்பர திருமணத்தைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸின் மாணவர் சங்க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
பாஜகவைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணத்தை இன்று நடத்தி வைத்தார். இத்திருமணத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நாடே கருப்பு பணம் பற்றி பேசும்போது சர்ச்சைக்குரிய கலந்து கொள்ள வேண்டாம் எனவும் பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. காங்கிரஸும் இந்த ரகசிய உத்தரவை கர்நாடக தலைவர்களுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் ரெட்டி வீட்டு திருமணத்தில் பாஜகவினர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பெங்களூருவில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வேடிக்கை என்னவெனில் மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்திய போது கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசின் அமைச்சர்களும் ரெட்டி வீட்டு திருமணத்தில் பங்கேற்றனர் என்பதுதான்.
இதுதெரியாமல் மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி போலீசாருடன் மல்லுக்கட்டியது பரிதாபமாக இருந்தது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications