இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம்: முட்டுக்கட்டைகள் முழுமையாக தகர்க்கப்பட்டனவா?
டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தின் முட்டுக்கட்டைகள் எப்படி தகர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி உடன்பாட்டில் இருந்த முட்டுக்கட்டை தகர்க்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் காப்பீடு கொடுப்பது யார் என்பதுதான் இதுநாள் வரை முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை மனதில் கொண்டு இந்திய நாடாளுமன்றத்தில், அணு உலைகளை தயாரிக்கும் நிறுவனங்களே விபத்து ஏற்பட்டால் பொறுப்பு என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்கா நிறுவனங்கள் தயாராக இல்லை. இதுதான் இருநாடுகளிடையேயான வர்த்தக அணுசக்தி உடன்பாட்டில் இருந்த முட்டுக்கட்டை.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இந்தியாதான் எதிர்கொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது. ஆனால் இதற்கு இந்தியா உடன்படவில்லை. இறுதியாக விபத்துகளுக்கு நட்ட ஈடாக காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த உடன்பாட்டின் இதர அம்சங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இரு நாட்டு தலைவர்களும் முட்டுக்கட்டை வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
மேலும் காப்பீட்டுத் திட்டம் குறித்த தெளிவான விளக்கமும் தெரியப்படுத்தப்படவில்லை. யார் எவ்வளவு தொகையை காப்பீட்டுக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக தெரியவரவில்லை.
வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் கூறுகையில்,அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் 3 காப்பீட்டு நிறுவனங்கள் 7.5 பில்லியன் தொகையை இத்திட்டத்துக்கு செலுத்த வேண்டும்; எஞ்சிய தொகையை அரசு படிப்படியாக செலுத்தும். மொத்தம் 26 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்றார்.
இந்திய சட்டப்படியான விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோர் அணு உலைகளை நிறுவிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரலாம் என்ற பிரிவுக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் ஆட்சேபம் தெரிவித்தன. இதற்கு தீர்வாக தற்போது ரூ1,500 கோடிக்கான நிதியம் ஒன்றை அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் அணு உலைகள் கண்காணிப்பு தொடர்பான அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து இந்தியத் தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இருநாடுகளின் சட்ட ஆலோசனைக் குழுக்கள் இது குறித்து பரிசீலிக்கும் என்றும் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications