வலுவிலந்த ஓகி புயல் நாளை இரவு குஜராத்தில் கரையைக் கடக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத்தில் ஓகி புயல் நாளை இரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Recommended Video

டெல்லி : தமிழக தென் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஓகி புயல் நாளை குஜராத் கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குமரி அருகே வங்கக்கடலில், கடந்த 30ம் தேதி உருவான ஓகி புயல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அரபிக்கடல் அருகே லட்சத்தீவை கடந்து சென்ற புயல் அங்கும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வடமேற்கு திசையில் குறைந்த வேகத்தில் வீசி வரும் புயல் வலுவிழந்து உள்ளது. இதனை ஒட்டி நாளை புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. மேலும், வலுவிழந்த நிலையை அடையும் புயல் சூரத் அருகே நாளை இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. தொடர்ந்து தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சூறைக் காற்றுடன் புயல் நெருங்குவதால் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, வட கர்நாடக மாநில மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் குஜராத், வடக்கு மகராஷ்டிரா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும். புயல் கரையை கடந்த பின்பு வடகிழக்கு திசையில் சுழன்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications