‘ஆட்’ நம்பர் மாப்பிள்ளைக்கு, ‘ஈவன்’ நம்பர் பெண் தேவை... இது டெல்லி மேட்ரிமோனியல்!
டெல்லி: என்னடா இது டெல்லிக்கு வந்த டென்ஷன்.. என்று இந்த செய்தியைப் படித்து முடித்ததும் உங்களுக்குத் தோன்றும்.
தலைநகர் டெல்லியில் அளவுக்கு அதிகமாக காற்று மாசுபட்டுள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புத்தாண்டு முதல் அமலுக்கு வந்த இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த திட்டத்தை தொடர்வதா?, கைவிடுவதா? என்பதை டெல்லி அரசு முடிவு செய்யும்.
இந்நிலையில், டெல்லி அரசின் இந்தத் திட்டத்தை வைத்து ஜோக் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
இது டெல்லியில் வெளியான மணமகள் தேவை விளம்பரம் எனக் கூறப்படுகிறது. அதில், ‘26 வயதான நன்கு படித்து கை நிறைய சம்பளம் வாங்கும் இளைஞர் ஒருவர் தன்னிடம் ஒற்றைப்படை எண் கொண்ட கார் இருப்பதாகவும், எனவே தனக்குப் பொருத்தமாக இரட்டைப்படை எண் கொண்ட கார் வைத்திருக்கும் பெண் தேவைப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே, பொருத்தமான பெண்கள் காரின் புகைப்படம் மற்றும் பதிவெண்ணை உறுதி செய்யும் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்னமோ போடா மாதவா...உனக்கு எல்லாமே வெள்ளாட்டாப் போச்சு..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications