Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மார்பில் பாய்ந்த குண்டு.." காவலர் சுட்டதில் சரிந்த ஒடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ் காலமானார்

துப்பாக்கி சூடு காரணமாக ஒடிசா அமைச்சர் நபா தாஸ் படுகாயமடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

ஜார்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபா தாஸ் இப்போது கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்று ஜார்சுகுடா மாவட்டத்தில் பிரஜராஜ்நகர் அருகே காந்தி சௌக் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

 மார்பில் பாய்ந்த குண்டு

மார்பில் பாய்ந்த குண்டு

அங்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த காவலர் எதற்காக திடீரென அமைச்சரை நோக்கிச் சுட்டார் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை

போலீசார்

போலீசார்

இது குறித்து பிரஜ்ராஜ்நகர் துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி குப்தேஸ்வர் போய் கூறுகையில், "போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்ற நபர் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். படுகாயமடைந்த அமைச்சர் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

அமைச்சர் வாகனத்தில் இருந்து இறங்கிய உடனேயே, அந்த காவலர் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ரத்த வெள்ளத்தில் இருக்கும் அமைச்சர் காரில் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மருத்துவமனையில் மரணம்

மருத்துவமனையில் மரணம்

இந்நிலையில் தான் மருத்துவமனையில் வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இருப்பினும் கூட சிகிச்சை பலனின்றி அமைச்சர் நபா தாஸின் உயிர் பிரிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+