Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசா: 78 இடங்களை கைப்பற்றியது பாஜக.. 24 ஆண்டு கால ஆட்சியை இழந்தார் நவீன் பட்நாயக்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 78 தொகுதிகளிலும், பிஜேடி 51 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் வென்றது. இதன் மூலம் ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் 5 முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்.

நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஒடிசா மாநிலம். ஒரிசா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த மாநிலம் தற்போது ஒடிசாவாக மாறியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. ஒடிசாவில் ஒரு கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Naveen Patnaik VK Pandian 2024

தற்போது ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி என 4 கட்டங்களாக ஒடிசாவில் தேர்தல் நடைபெற்றது.

சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், பாஜக 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன. ஒடிசாவில் சட்டசபை தேர்தலில் 63.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

கடந்த தேர்தல் முடிவுகள்: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாஜக 23 இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 9 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஒடிசா ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசைக்கமுடியாத இரும்புக்கோட்டையாக திகழ்ந்தது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தது. பிஜு பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து, ஒடிசா மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் அவர் ஜனதா தளத்தில் இணைந்தார்.

நவீன் பட்நாயக்: ஒடிசா மாநிலத்தின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த பிஜு பட்நாயக்கின் மகன் தான் தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வந்து பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. நவீன் பட்நாயக் முதல்வர் ஆனார். அன்று முதல் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்து வருகிறார் நவீன் பட்நாயக்.

விகே பாண்டியன்: தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கார்த்திகேயன் பாண்டியன் நவீன் பட்நாயக்கின் வலது கரமாக திகழ்ந்து வருகிறார். விகே பாண்டியனின் கடின உழைப்பு, நிர்வாகத்திறன் நவீன் பட்நாயக்கை கவர்ந்ததால் அவரை தனது கட்சியின் அடுத்த முகமாக கொண்டுவர திட்டமிட்ட நவீன் பட்நாயக், அவரை விருப்ப ஓய்வு பெறச் செய்தார். ஒடிசா மாநில 5T தலைவராக கேபினட் அந்தஸ்தில் நியமித்தார். பின்னர் அவரை கட்சியிலும் இணைத்துக்கொண்டார். வி.கே. பாண்டியன் இந்த தேர்தலில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். பிரச்சாரங்களில் விகே பாண்டியனை குறிவைத்து பாஜக விமர்சித்தது.

ஒடிசாவை தமிழர் ஆள்வதா? என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு பாண்டியன் என பாஜகவினர் கூறினர். எனினும், விகே பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என மறுத்தார் நவீன் பட்நாயக். விகே பாண்டியனும், ஒடிசாவின் முதல்வராக மண்ணின் மைந்தர் நவீன் பட்நாயக்கே மீண்டும் அமர்வார் எனக் கூறினார்.

தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைப் பிடிக்க ரெடியாகி வருகிறார் நவீன் பட்நாயக். பாஜக இந்த முறை ஒடிசாவை பிடித்துவிட தீவிர முயற்சி எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனை கைகொடுக்கும் என்று நம்புகிறார் மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமால். அதே நேரம் காங்கிரஸ் கட்சியும், இழந்த செல்வாக்கை பெற களப்பணியாற்றி உள்ளது.

24 ஆண்டுகளாக ஒடிசாவை ஒரே மனிதர் ஆண்டு வரும் நிலையில், நவீன் பட்நாயக், 6-வது முறையாகத் தொடர்ந்து முதல்வராக அரியணை ஏறினால், அது மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசுவின் 5 முறை தொடர் முதலமைச்சர் என்ற சாதனையை முறியடித்து விடுவார். அதோடு நீண்ட காலம் முதலமைச்சராக இருந்துள்ள சிக்கிமின் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையையும் (24 ஆண்டுகள் 165 நாட்கள்) முறியடிப்பார்.

இந்த முறையும் ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் ஆட்சி தொடருமா? அல்லது பாஜகவோ, காங்கிரஸ் கட்சியோ ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்குமா? என்ற கேள்வி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைய உள்ள நிலையில் மக்கள், பிஜு ஜனதா தளத்தை ஆட்சியில் இருந்து அகற்றி தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள்.

வெற்றி நிலவரம்: ஒடிசா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் பாஜக 78 தொகுதிகளிலும், பிஜேடி 51 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 3 இடத்தில் சுயேட்சையும் வென்று உள்ளனர்.

பெரும்பான்மைக்கு 74 சீட்கள் தேவை என்ற நிலையில், 78 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சி ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது. கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக், ஆட்சியை இழக்கிறார்.

2019 சட்டமன்றத் தேர்தலில் 72,545 வாக்குகள் பெற்று தோல்வியுற்ற பிஜய் தலபெஹெராவுக்கு, பாஜக இந்த முறை சீட் கொடுக்க மறுத்தது. தலபெஹெராவின் தலைமையின் கீழ், பஞ்சாயத்து தேர்தலில் 8 ஜில்லா பரிஷத் தொகுதிகளில் ஏழு இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பாஜக தனக்கு சீட் கொடுக்காததால் சுயேட்சையாக களமிறங்கினார் பிஜய் குமார் தலபெஹெரா. பரம்பரா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிஜய் குமார் தலபெஹெரா, தற்போது வென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+