Odisha Assembly election results: நவீன் பட்நாயக்கிற்கு பெரிய அடி.. வெற்றியை நோக்கி முன்னேறும் பாஜக!
புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பின்னடைவை சந்தித்து வருகிறது. நவீன் பட்நாயக், காந்தபாஞ்சி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஒடிசாவில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது பாஜக 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மக்களவைத் தேர்தலோடு ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஒடிசாவில் 63.46 சதவீத வாக்குகள் பதிவானது. பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜேடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் ஒடிசா தேர்தல் களம் நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்து வரும் நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
2019ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சி அமைத்தது. பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 11 மணி நிலவரப்படி பாஜக 65 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் பிஜேடி 45 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில், காந்தபாஞ்சியில் அவர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் லேசான பின்னடைவைச் சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் லக்ஷ்மண் பக் முந்தியுள்ளார்.
ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் பதவி வகித்து வந்த அமைச்சர்கள் பலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும். பெரும்பான்மை தொகுதிகளை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது.
ஒடிசாவில் பாஜக வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் புவனேஷ்வரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications