ஒடிஷாவை உலுக்கும் சிட் பண்ட் மோசடி: டிவி, நாளிதழ் உரிமையாளர்கள் கைது!!
புவனேஸ்வர்: ஒடிஷாவை உலுக்கும் ஏ.டி. குழும சிட் பண்ட் மோசடி வழக்கில் டிவி மற்றும் நாளிதழ் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி வழக்கில் ஒடிஷா அமைச்சர்களும் விசாரணை வளையத்தில் இருப்பதால் முதல்வர் நவீன்பட்நாயக் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சாரதா சிட் பண்ட் மோசடி நாட்டை உலுக்கியது. இதில் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.
இதேபோல் பக்கத்து மாநிலமான ஒடிஷாவிலும் ஒரு சிட் பண்ட் மோசடி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஒடிஷாவில் செயல்பட்டு வந்த அர்தா தவா (ஏடி) குழுமத்தின் சிட் பண் மோசடி குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவர் கைது
இதில் முதல் கட்டமாக ஒடியா மொழி தொலைக்காட்சியான கம்யாப்-ன் உரிமையாளர் மனோஜ் தாஸ் மற்றும் ஒடிஷா பஸ்கார் நாளிதழின் உரிமையாளர் மது மொகந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆளும் பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த ஆஷிஸ் சாகுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் 44 ஒடிஷா அரசியல்வாதிகளையும் சிபிஐ விசாரணைக்கு வர வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.
இதில் 6 பேர் ஒடிஷா மாநில அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் அடக்கம். இந்த விவகாரம் ஒடிஷா மாநில ஆளும் பிஜூ ஜனதா தள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications