ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் "வலது கரம்" தமிழகத்தின் விகே பாண்டியன் IAS.. கிடைத்தது 'சூப்பர்' பதவி!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியனுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்திலான புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது பேசு பொருளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பிற மாநிலங்களில் முதன்மை பதவி வகித்து வந்துள்ளனர். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற இறையன்புவின் சகோதரர் திருப்புகழ், மோடி குஜராத் முதல்வராக இருந்த போது உறுதுணையாக இருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி. ஒடிஷா மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக தமிழ்நாட்டின் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பணியாற்றினார். தற்போது ஒடிஷா மாநில அரசின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றுகிறார். இந்த வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐ.ஏ.எஸ், ஒடிஷா மாநில அரசிலும் அரசியலிலும் நீண்டகாலம் பேசு பொருளாக இருப்பவர். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராகவும் ஒரு கட்டத்தில் பிஜூ ஜனதா தளத்தின் முதன்மை அதிகார மையமாகவும் உருவெடுத்தவர் விகே பாண்டியன்.

பாஜகவினர் தாக்குதல்: 2018-ம் ஆண்டு விகே பாண்டியன், அவரது மனைவி சுஜாதா கார்த்திகேயன் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி இருந்தது. அப்போது விகே பாண்டியன் இல்லம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியும் இருந்தனர்.

விருப்ப ஓய்வு: இந்நிலையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலாளராக பதவி வகித்த நிலையில் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார் விகே பாண்டியன். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்திருந்தது.
புதிய பதவி: தற்போது விகே பாண்டியன், விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே முதல்வர் நவீன்பட்நாயக், அதிமுக்கிய பதவியை வழங்கி உள்ளார். ஒடிஷா அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருப்பது 5T திட்டம். அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக் கூடிய இந்த 5T திட்டம் மற்றும் நபின் ஒடிஷா தலைவராக தற்போது விகே பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது கேபினட் அமைச்சர் அந்தஸ்துள்ள பதவி. முதல்வர் நவீன் பட்நாயக்கின் கீழ் நேரடியாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் விகே பாண்டியன் பணியாற்றுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications