உலகின் நீளமான ஒடிஷா ஹிராகுட் அணை.. 4 லட்சம் கன அடிநீர் திறப்பு- 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
புவனேஸ்வர்: உலகின் மிக நீளமான ஒடிஷா ஹிராகுட் அணையில் இருந்து வினாடிக்கு 4 லட்சம் கன அடிநீர் திறக்கப்படுகிறது. இதனையடுத்து சம்பல்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹிராகுட் அணை நீர் திறப்பால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒடிஷா மாநில அரசு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
உலகிலேயே மிக நீளமானது ஒடிஷாவில் கட்டப்பட்டுள்ள ஹிராகுட் அணை. இதன் மொத்த கொள்ளளவு 630 அடி. நமது மேட்டூர் அணையைப் போல 5 மடங்கு பெரியது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. மகாநதி ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைக்கு நீர்வரத்து 3,16,000 கன அடியாக உள்ளது. ஹிராகுட் அணையில் 40,126 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது ஹிராகுட் அணையின் நீர்மட்டம் 619 அடியாக உள்ளது.

இந்த நிலையில் ஹிராகுட் அணையின் 20 மதகுகளையும் படிப்படியாக திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிராகுட் அணையின் முதல் 7 மதகுகள் இன்று பூஜைகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. அடுத்த 7 மதகுகள் நாளை காலை 8 மணிக்கு திறக்கப்படும். இந்த 7 மதகுகளின் வழியாக வினாடிக்கு 4.50 லட்சம் கன அடிநீர் திறந்துவிடப்படும். நாளை மறுநாள் 7 மதகுகள் வெளியாக வினாடிக்கு மொத்தம் 5 லட்சம் கன அடிநீர் வெளியேற்றப்பட உள்ளது.

இதனையடுத்து சம்பல்பூர், சோனிபூர், நயாகர், பூரி, கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திபரா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hirakud Dam: Gates Open To Release Water
— Soumyajit Pattnaik (@soumyajitt) July 28, 2024
Water is being released through 20 gates from Hirakud dam today.
SRC has instructed Collectors of lower Mahanadi basin to remain alert and take necessary steps for creating awareness among the people pic.twitter.com/TPtu2E51dV
மகாநதி ஆற்றின் கரையோர மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கால்நடைகளையும் வீடுகளில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மகாநதி வெள்ளம் பாய்ந்தோடும் மாவட்டங்களில் அவசரகால பேரிடர் நிவாரண மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களின் நிர்வாகமும் முழு அளவில் உஷார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications