கொடுமை.. 5ம் வகுப்பு கல்வி தகுதியிருந்த வேலைக்கு MBA இளைஞர்கள்! ஏர்போர்ட் ரன்-வேயில் நடந்த தேர்வு!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊர் காவல் படையில் காலியாக இருந்த வெறும் 187 காலியிடங்களுக்கு 8,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், எம்பிஏ படித்தவர்கள் ஆகும். அத்தனை பேருக்குத் தேர்வு எழுத வகுப்பறை ரெடி செய்ய முடியாததால் விமான ஓடுபாதை தளத்திலேயே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே சில மாநிலங்களில் மோசமான வேலையின்மை இருக்கிறது. இதனால் சாதாரண ப்யூன், வாட்ச்மேன் போன்ற வேலைகளுக்கே கூட பட்டதாரிகள் வேலைக்குச் சேர்வது அதிகரித்துள்ளது. அப்படியொரு வினோதமான சம்பவம் தான் ஒடிசாவில் நடந்துள்ளது.

தேர்வு
அங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில், ஜமதர்பாலி விமான ஓடுதளத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த வேலைக்குப் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இத்தனை பேர் விண்ணப்பிப்பார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு பேருக்குத் தேர்வு அறை ரெடி செய்ய முடியாததால் அங்குள்ள விமான ஓடுதளத்திலேயே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
விமான ஓடுதளம்
விமான ஓடுதளத்தில் வரிசையாக அமர்ந்து இளைஞர்கள் தேர்வு எழுதிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தேர்வு எழுத வந்தவர்களுக்கு மேசைகளோ அல்லது சேர்களோ வழங்கப்படவில்லை. இதனால் இளைஞர்கள் விமான ஓடுதளத்தின் கான்கிரீட் தரையிலேயே அமர்ந்து தேர்வு எழுத வேண்டியிருந்தது. தேர்வில் முறைகேடு நடப்பதைத் தடுக்கவும் அவர்கள் கண்காணிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
பல ஆயிரம் பேர் வரிசையாகச் சாலையில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சினிமா படம் போலப் பல நூறு மீட்டர் தூரத்திற்கு இளைஞர்கள் வரிசையாக அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
🚨 An airstrip in Odisha's Sambalpur turns into an exam hall as 8,000 graduates appear for 187 government posts. pic.twitter.com/wLEhCNucdM
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 20, 2025
பட்டதாரிகளும் விண்ணப்பம்
வெறும் 187 காலியிடங்களுக்காக சம்பல்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து 8,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஊர்க்காவல் படைப் பணிக்கு வேலைக்குச் சேர 5ஆம் வகுப்பு மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..! இருப்பினும், விண்ணப்பதாரர்களில் பலரின் கல்வித் தகுதிகள் அதிகாரிகளையே வியப்படையச் செய்தன. பல பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏ, எம்சிஏ படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.. ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேர்வு
விண்ணப்பதாரர்கள் காலை 6 மணிக்குத் தேர்வு நடக்கும் இடத்திற்கு வர வேண்டும் எனச் சொல்லப்பட்டு இருந்தது. இருப்பினும், அதிகப்படியானோர் விண்ணப்பித்து இருந்ததால் காலை 9 மணி முதல் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வினாத்தாள்கள் காலை 10:30 மணிக்கு வழங்கப்பட்டன. 30 நிமிடங்கள் முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அது 20 மதிப்பெண்களுக்கு! அடுத்து 30 மதிப்பெண்களுக்கான ஒரு மணிநேரப் பொது அறிவுத் தேர்வும் தனியாக நடத்தப்பட்டது.
இத்தனை பேர் ஒரே இடத்தில் குவியும்போது அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகச் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 24 ஆய்வாளர்கள், 86 உதவி மற்றும் இளநிலை ஆய்வாளர்கள், அத்துடன் 100-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது அங்கு வேலையின்மை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications