Odisha Lok Sabha Election Results LIVE: மும்முனை போட்டி.. ஒடிசாவில் 19 தொகுதிகளை அள்ளும் பாஜக!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் லோக்சபா தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 19 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பிஜேடி 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
ஒடிசாவில் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளமும் பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் ஜே.எம்.எம் 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவியது. அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.

மே 13 அன்று, நபரங்பூர், கோராபுட், பெர்ஹாம்பூர் மற்றும் காலாஹண்டி ஆகிய இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை இடங்கள். அடுத்த கட்டமாக மே 20ஆம் தேதி அஸ்கா, காந்தமால், போலங்கிர், பர்கர் மற்றும் சுந்தர்கர் மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 25 அன்று, சம்பல்பூர், கியோஞ்சார், தேன்கனல், பூரி, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மயூர்பஞ்ச், பாலசோர், பத்ரக், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் மற்றும் ஜாஜ்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக ஒடிசாவில் 74.51% வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளுக்கான போட்டியில் பிஜேடி - பாஜக இடையே கடும் போட்டி இருப்பதாகத் தெரிகிறது.
2019 தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜேடி 21ல் 12 இடங்களை வென்றது. பாஜக 8, காங்கிரஸ் 1 என வெற்றி பெற்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய அளவில் வெற்றி பெற்ற போதிலும், ஒடிசா மாநிலத்தில் பிஜேடி மொத்தமுள்ள 21 இடங்களில் 20 இடங்களில் வெற்றி பெற்றது.
ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பரில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக பிஜேடி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவரைக் குறி வைத்தே ஒடிசாவில் பாஜக பிரச்சாரம் செய்து வந்தது. ஒடிசா மாநிலத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பாஜக அங்குப் பிரச்சாரம் செய்து வந்தது.
இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைய உள்ளது. பாஜகவின் பிரச்சாரங்கள் வொர்க் அவுட் ஆகியுள்ளன. ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளில் 19-ஐ பாஜக கைப்பற்ற உள்ளது. ஒடிசாவில் 19 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பிஜேடி 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.












Click it and Unblock the Notifications