ஏழை என்றால் இளக்காரமா? ரூ.1500 கடனுக்காக பைக்கில் இளைஞரை கட்டி.. இழுத்துச்சென்ற கந்துவட்டி கும்பல்
புவனேஸ்வர்: ரூ.1,500 கடனை திருப்பிச் செலுத்த தாமதமானதால், ஏழை இளைஞரை கந்துவட்டிக்காரர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் கட்டி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி என்ற பெயரில் கொலைகளும், சித்ரவதைகளும் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு விலங்கை போல கயிறால் கட்டி ஒரு மனிதனை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ளனர்.

இறுதிச்சடங்குக்கு பணம் இல்லை
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்தவர் ஜகன்நாத் (22). சிறு வயதிலேயே தந்தையை இழந்தவரான கிஷோர், தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்துதான் அவரது குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை நடந்து வருகிறது. இந்த சூழலில், ஜகன்நாத்தின் தாத்தா கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு இறுதிச்சடங்கை செய்ய கிஷோரிடம் போதிய அளவு பணம் இல்லை.

வீட்டுக்கு வந்த கந்துவட்டி கும்பல்
இதையடுத்து, அக்கம்பக்கத்தினரிடம் இருந்து, கந்துவட்டிக்காரர்களிடம் இருந்தும் ஜகன்நாத் பணத்தை கடனாக பெற்று தனது தாத்தாவின் இறுதிச்சடங்களை நடத்தினார். பின்னர் அவர்களிடம் வாங்கிய கடனை வாரந்தோறும் சிறிது சிறிதாக பணத்தை கொடுத்து ஜகன்நாத் அடைத்து வந்தார். இதில், ஒரு கந்துவட்டி கும்பலிடம் வாங்கிய 1,500 ரூபாய் கடனை அக்டோபர் 17-ம் தேதி வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, 2 ஆயிரம் ரூபாயை கேட்டு நேற்று இரவு ஜகன்நாத்தின் வீட்டுக்கு கந்துவட்டி கும்பல் வந்தது.

பைக்கில் கைகளை கட்டி..
அப்போது ஜகன்நாத், தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை என்றும், இரண்டு நாட்களில் பணத்தை கட்டி விடுவதாகவும் கூறினார். ஆனால் அதனை ஏற்காத கந்துவட்டிக்காரர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர்கள், கிஷோரின் கைகளை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டி வைத்து, பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றனர். இதனால் பைக்கின் பின்னால் கிஷோர் ஓடிச் சென்றார்.

கைது நடவடிக்கை
சுமார் 3 கி.மீ. தூரம் வரை அவர் இவ்வாறு ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், சுதாஹத் சதுக்கம் என்ற பகுதி அருகே அவர்கள் சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கந்துவட்டிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பைக்கில் கட்டப்பட்டிருந்த ஜகன்நாத்தை விடுவித்தனர். இதனிடையே, ஜகன்நாத்தை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications