ஹெலிகாப்டர் பயணத்திற்கு மட்டும் ₹17 கோடி.. விகே பாண்டியன் மீது பாயும் ஒடிசா போலீஸ்! பெரிய சிக்கல்
பாட்னா: நவீன் பட்நாயக் முதல்வராக இருந்தபோது அவரது ஆட்சியில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த விகே பாண்டியன் இப்போது சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையில் ஒடிசா அரசு இறங்கியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்!
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தவர் வி.கே. பாண்டியன். நவீன் பட்நாயக் முதல்வராக இருந்தபோது அங்குப் பெரும்பாலான பணிகளைக் கையாண்டவர் இந்த வி.கே. பாண்டியன் தான். அந்தக் காலகட்டத்தில் அவர் அதிகப்படியான அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒடிசா குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

ஒடிசா
இந்த விசாரணையைத் துணைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கௌடா மேற்கொண்டு வருகிறார். சுரேந்திர பானிகிரஹி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகளில் கௌடா இறங்கியுள்ளார்.
பிஜு ஜனதா தளம் அரசில் சக்திவாய்ந்த நபராக இருந்தவர் வி.கே. பாண்டியன். அவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்தபோது முதல்வரின் தனிச் செயலாளராகப் பணியாற்றினார். 2023 அக்டோபரில் அவர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், உடனடியாக அவர் 5T Initiativeன் சேர்மேனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட்டது. அடுத்த மாதமே, அதாவது 2023 நவம்பரில் அவர் பிஜு ஜனதா தளம் கட்சியிலும் இணைந்தார்.
அப்படியொரு துறையே இல்லை
இதற்கிடையே பாரதிய பிகாஷ் பரிஷத் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவரான பானிகிரஹி என்பவர் அப்போதே விகே பாண்டியனின் 5டி சேர்மேன் பதவி குறித்துப் புகாரளித்திருந்தார். அதாவது ஒடிசா அரசின் வணிக விதிகள், 1956 சட்டத்தின்படி மாநிலத்தில் '5T' என்ற துறை இல்லை என்று புகார் அளித்திருந்தார். மனுதாரர் பிகாஷ் பரிஷத் மேலும் கூறுகையில், "2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், அப்போதைய ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்தார். இருப்பினும், 2019ஆம் ஆண்டு ஒரு அறிவிக்கை மூலம் அவர் 5T செயலாளராக நியமிக்கப்பட்டார். இது விதிகளின் அப்பட்டமான மீறல்" என்றார்.
இந்தப் புகார் மனுக்களை அவர் அப்போதே ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு அனுப்பினார். ஆனால் அப்போது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பிரதமர் அலுவலகம் (PMO) மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குத் தனது குற்றச்சாட்டுகளை அனுப்பி வைத்தார்.
அடுக்கடுக்கான புகார்கள்
இது தொடர்பாக பிகாஷ் பரிஷத் மேலும், "ஹெலிகாப்டர் வாடகை மட்டும் சுமார் ₹9,03,60,346 செலவிடப்பட்டுள்ளது. அப்போதைய முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் பாண்டியன் ஒடிசா முழுவதும் ஹெலிகாப்டரில் தனியாகப் பயணம் செய்தார். எரிபொருள் உள்ளிட்ட இதர செலவுகளைச் சேர்த்தால் ஹெலிகாப்டருக்கு மட்டும் மொத்தம் ₹17.21 கோடி செலவிடப்பட்டுள்ளது.. அவரது பணி முதல்வர் அலுவலகத்திற்குள் மட்டுமே இருந்தது. ஆனால், அவர் ஒடிசா முழுக்க பயணித்தார். இது சட்டவிரோதமானது.
இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார், பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமல் புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும், தனது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவருக்கும் கட்டாய விடுமுறையை அறிவித்து அழைப்பு விடுத்தார். அவர் அப்போது நிர்வாகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினார்.
நடவடிக்கை தேவை
அரசியலமைப்புத் தலைவர்கள் உடல்நலக்குறைவால் இருக்கும் சமயங்களில், தனிச் செயலாளர்களுக்கு அதிகாரங்கள் போகாது. முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையில் ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளரால் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற முடிந்தது எப்படி?" எனத் தனது கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாண்டியன், பட்நாயக்கின் பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்கச் செல்வாக்குடன் திகழ்ந்தார். இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விலகிய பிறகு, அவர் பிஜு ஜனதா தளத்தில் முறைப்படி இணைந்தார். இருப்பினும், 2024-ஆம் ஆண்டு சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்களில் கட்சி பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்த நிலையில், விகே பாண்டியன் அரசியலில் இருந்து விலகினார். பானிகிரஹி அளித்த புகாரின் அடிப்படையிலேயே பாண்டியன் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications