பாஜக குஷி- ஒடிஷா ராஜ்யசபா தேர்தலில் பிஜூ ஜனதா தளம் திடீர் ஆதரவு- NDA கூட்டணிக்கு திரும்பும் நவீன்ஜி?
புவனேஸ்வர்: ஒடிஷா ராஜ்யசபா தேர்தலில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆளும் பிஜூ ஜனதா தளம் அறிவித்துள்ளது பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஒடிஷாவில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிஷாவின் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் அமர் பட்நாயக், பிரசந்தா, நந்தா, பாஜகவின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரது ராஜ்யசபா எம்பி பதவி காலம் ஏப்ரலில் முடிவடைவதால் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

ஒடிஷா சட்டசபையில் மொத்தம் 147 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு 111 எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு 22 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். காங்கிரஸ் 8, சிபிஎம் 1 எம்.எல்.ஏ. உள்ளனர்.
ஒடிஷா ராஜ்யசபா தேர்தல்: இந்த நிலையில் ஒடிஷா ராஜ்யசபா தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தின் தேபாஷிஸ் சமந்த்ராய், சுபாஷிஷ் குனிதா ஆகியோர் போட்டியிடுவர் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார். ஆனால் 3-வது வேட்பாளரை பிஜூ ஜனதா தளம் நிறுத்தவில்லை. பிஜூ ஜனதா தளத்தின் இந்த நிலைப்பாடு விவாதப் பொருளானது.
பிஜூ ஜனதா தளம் திடீர் ஆதரவு: தற்போது ஒடிஷா ராஜ்யசபா தேர்தலில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என டெல்லி பாஜக மேலிடம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் நலன் கருதி பாஜக வேட்பாளர் அஸ்வினி வைஷ்ணவ்வை ஆதரிப்பதாக பிஜூ ஜனதா தளம் திடீரென அறிவித்திருப்பது பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணிக்கு திரும்புதா?: ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியும் நீண்டகாலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்தது. பின்னர் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் பல்வேறு சூழல்களில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது பிஜூ ஜனதா தளம். ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு எதிரான கட்சியாக பாஜக இருக்கிறது. காங்கிரஸ் தமது இருப்பை இழந்து கொண்டிருக்கிறது. தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டுகிறது. இந்த பின்னணியில் ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் பிஜூ ஜனதா தளம் திரும்புமா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.
அதிமுக, அகாலி தளம், தெலுங்குதேசம்: தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் அகாலி தளம், தெலுங்குதேசம் மற்றும் அண்ணா திமுகவை மீண்டும் பாஜக அணிக்கு கொண்டு வருவதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சட்டசபையில் திடீரென அதிமுக மூத்த தலைவர் தங்கமணியும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், அதிமுகவை பாஜக அணிக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அண்மையில் டெல்லியில் முகாமிட்டு பாஜக கூட்டணிக்கு திரும்புவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications