துண்டான உடல்கள்.. ஒடிசாவில் புல் ஸ்பீடில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில்.. எவ்வளவு வேகம் தெரியுமா?
புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280 பேர் இறந்துள்ள நிலையில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புல் ஸ்பீடில் இயங்கியதும், அதன்பிறகு என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. அதன்பிறகு அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்தியாவில் ரயில்கள் அவ்வப்போது தடம் புரளும் நிலையில் 3 ரயில்கள் அடுத்தடுத்து இப்படி விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் ரயில் விபத்து நடந்து பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விபத்து நடந்தபோது ரயில்கள் எவ்வளவு ஸ்பீடில் சென்றன. விபத்துக்கு எப்படி நடந்தது? என்பது பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பில் சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கோரமண்டல் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையம் சென்றது. இந்த ரயில் நிலையத்தில் கோரமண்டல் ரயில் நிற்க வேண்டியது இல்லை.
இதனால் ரயில் புல் ஸ்பீடாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தடம் புரண்டது. மொத்தம் 21 பெட்டிகள் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் வுிழுந்தது. இந்த வேளையில் யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பஹானகா பஜார் ரயில் நிலையம் வழியாக சென்று மோதி தடம்புரண்டது. இதில் 2 பெட்டிகள் தடம் புரண்டது. அதேபோல் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். யஷ்வந்த்பூர் ரயிலில் 1,039 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் புல் ஸ்பீட் என்பது மணிக்கு 130 கிலோமீட்டராகும். இந்த ரயில் 1,659 கிலோமீட்டர் தொலைவை கடந்து 25 மணிநேரம் 30 நிமிடத்தில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வரும். இந்நிலையில் தான் தற்போது விபத்து நடந்தபோது ரயில் புல்ஸ்பீட்டில் இயங்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் விபத்து சமயத்தில் ரயில் 130 கிலோமீட்டர் அல்லது 127 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications