Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசா ரயில் விபத்து: டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும் இழப்பீடு.. ரயில்வே கொடுத்த ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் மீது தடம் புரண்டது. தடம்புரண்ட இந்த பெட்டிகள் மீது பெங்களுரில் இருந்து வந்த ஹவுரா ரயில் மோதியது.

Odisha Train accident: Non ticketed passengers also got Compensation, Railway notification

சில நிமிடங்களுக்குள் நடைபெற்ற இந்த கோர விபத்துக்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடைபெற்ற இந்த மோசமான ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

காயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனவே காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக இழப்பீடு தொகையை அறிவித்தது. அதன்படி, உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ ரூ.2 லட்சம், சிறிய காயங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தில் டிக்கெட் எடுக்காத பயணிகளுக்கும் உரிய இழப்பீடு தொகை அளிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறும் போது, ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணித்திருந்தாலும் அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் உறவினர்கள் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவி செய்ய அரசு சார்பில் ஒருவர் உடன் இருக்கிறார்.

Odisha Train accident: Non ticketed passengers also got Compensation, Railway notification

காயமடைந்த அல்லது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் நேரில் வர ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். பயணம் மற்றும் பிற செலவுகளை ரயில்வே கவனித்துக் கொள்ளும். 139 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் மூத்த ரயில்வே அதிகாரிகள் பதிலளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகம் வரை இயக்கப்படும் இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்த பல பயணிகளும் பிழைப்பு தேடி சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வருகை தந்தவர்கள் என சொல்லப்படுகிறது. எனவே, எளிய பின்னணி கொண்ட இந்த பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும் அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படும் என்ற ரயில்வேயின் அறிவிப்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+