ஒடிஷா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 278 - அடையாளம் காணப்படாத 101 உடல்கள்! சிபிஐ விசாரணை தொடக்கம்!
புவனேஸ்ர்: ஒடிஷா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானோரில் 101 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிஷாவின் பாலசோர் அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது. சில நிமிடங்களில் இந்த கோர விபத்து உலகையே அதிரச் செய்தது.

ஒடிஷா கோர ரயில் விபத்தில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னமும் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கிறது.
இதனிடையே ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ தமது விசாரணையை தொடங்கி இருக்கிறது. ஒடிஷா ரயில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் ரயில்வே வாரியமோ, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. மத்திய அமைச்சர்களும் நாசவேலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து 10 பேர் கொண்ட சிபிஐ குழு நேற்று ஒடிஷாவின் பாலசோர் பகுதிக்கு சென்று விபத்து நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்தது.

மேலும் ஒடிஷா ரயில் விபத்தில் தங்களின் உறவினர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உதவும் வகையில் ஒடிஷா அரசின் உதவியுடன் ரயில்வே அமைச்சகம் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை கொண்டு இறந்தவர்கள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள், அடையாளம் தெரியாத உடல்களுக்கு உரியவர்களை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கண்டறியலாம்.
ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தோரின் புகைப்படங்களை கொண்ட இணைய தள முகவரி
https://srcodisha.nic.in/Photos%20Of%20Deceased%20with%20Disclaimer.pdf
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் பட்டியலை கீழ்காணும் இணையதள முகவரியில் காணலாம்
கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத நபர்களின் பட்டியல் கீழ்காணும் இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளது
இது தவிர ரயில்வே உதவி எண் 139-லும், புவனேஸ்வர் மாநகராட்சி உதவி எண். 18003450061/1929 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications