Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயம்.. பாஜகன்னா பயம்.. கூட்டணியில் இல்லாமலே.. ஓடி வந்து உதவிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ராஜ்யசபா தேர்தலில் ஒடிஷாவில் பாஜக களமிறக்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை திடீரென ஒடிஷாவின் ஆளும் பிஜூ ஜனதா தளம் ஆதரிப்பது தொடர்ந்தும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. பிஜூ ஜனதா எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துவிடுமோ என்ற அச்சத்திலேயே முதல்வர் நவீன் பட்நாயக் தாமாக முன்வந்து பாஜகவின் அஸ்வினி வைஷ்ணவை ஆதரித்தாரா? என்பதும் கேள்வியாக உள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருப்பவை ஆளும் பிஜூ ஜனதா தளம் (BJD, பிஜேடி) மற்றும் பாஜக. ஒடிஷா சட்டசபையில் பாஜகதான் எதிர்க்கட்சி. இம்மாநிலத்தில் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. மாநில அரசியலில் பிஜேடியும் பாஜகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனால் தேசிய அளவில் குறிப்பாக நாடாளுமன்ற ராஜ்யசபாவில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலைகளில் எல்லாம் கை கொடுத்து ஆதரித்து வரும் கட்சிகளில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் ஒன்று.

 Odisha: Why BJD extends Support to BJP in Rajya Sabha Election?

ராகுல் காந்தி கடும் விமர்சனம்: இதனால் மாநிலத்தில் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும் பிஜூ ஜனதா தளம், மாநில கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. பிஜூ ஜனதா தளத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிதான். மாநிலத்தில் மட்டுமே தீவிர பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றுகிறது. இதனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிஜேடிக்கும் பிஜேபிக்கும் இடையே ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்.. மற்றவகையில் இரு கட்சிகளும் ஒன்றுதான் என விமர்சித்தும் வருகின்றனர்.

ஒடிஷா நிலவரம்: இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஒடிஷாவில் மொத்தம் 3 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. பிஜூ ஜனதா தளத்துக்கு சட்டசபையில் உள்ள பெரும்பான்மை அடிப்படையில் எளிதாகவே 3 ராஜ்யசபா எம்பி இடங்களைக் கைப்பற்றிவிடவும் முடியும். அதாவது 145 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஒடிஷா சட்டசபையில் 108 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம். இதனால் 3 ராஜ்யசபா எம்பி இடங்களையும் தம் வசமாக்குவது என்பது அக்கட்சிக்கு எளிதானது ஒன்றுதான்.

நவீன் பட்நாயக்கின் புதிர் அறிவிப்பு: ஆனால் நவீன் பட்நாயக்கோ 2 ராஜ்யசபா வேட்பாளர்களை மட்டுமே முதலில் அறிவித்தார். பிஜூ ஜனதா தளத்தின் தேபாஷிஸ் சமந்த்ராய், சுபாஷிஷ் குனிதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் 3-வது வேட்பாளரை நவீன் பட்நாயக் அறிவிக்காமல் இருந்தது கேள்விகளை எழுப்பி இருந்தது.

பாஜகவின் திடீர் அறிவிப்பு: இந்த பின்னணியில் திடீரென பாஜக மேலிடம் ஒடிஷா ராஜ்யசபா தேர்தலில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என அறிவித்தது. ஒடிஷா சட்டசபையில் பாஜகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். அஸ்வினி வைஷ்ணவ் ஜெயிக்க மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தேவை. அப்படியான நிலையில் ஏன் பாஜக, ஒடிஷாவில் அதுவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது என்பது இன்னொரு பக்கம் எழும்பிய கேள்வி.

பாஜகவை மகிழ்வித்த நவீன் அறிவிப்பு: இந்த கேள்விகள் பரபரத்துக் கொண்டிருந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்- அதாவது ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு தரும் என அதிரடியாக அறிவித்தார் நவீன் பட்நாயக். இதுதான் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

கட்சி உடையும் அச்சத்தில் நவீன்?: பாஜகவின் வேட்பாளரை நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்க 2 காரணங்கள்தான் இருக்க முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதாவது, பிஜூ ஜனதா தளத்தின் 15 எம்.எல்.ஏக்களை கட்சி மாற வைத்து அஸ்வினி வைஷ்ணவ்வை பாஜகவால் வெல்ல வைக்க முடியும்; எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ கட்சிகளை உடைத்து சித்து விளையாட்டு விளையாடிய பாஜகவுக்கு பிஜூ ஜனதா தளமும் ஒரு பகடைக்காய்தான். அப்படி ஒரு அச்சம் நவீன் பட்நாயக்குக்கும் உருவாகி, பேசாமல் பாஜக வேட்பாளரையே ஆதரிப்பதாக அறிவிப்போம் என பஞ்சாயத்துகளுக்கு முடிவு கட்டியிருக்கலாம் என்பது ஒரு தரப்பு கருத்து. இன்னொரு தரப்போ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பழைய பலமான மாநில கட்சிகளான அதிமுக, தெலுங்குதேசம் உள்ளிட்டவை சேர்ப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் பழைய கூட்டாளியான பிஜூ ஜனதா தளத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுத்து செல்வதற்கான ஒரு முன்னோட்டமாகவும் இதை பார்க்கலாம் என்கின்றனர். நல்லாவே கேம் ஆடுறாங்கப்பா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+