"ஒழுங்கா படிக்க மாட்டியா".. தலைக்கு ஏறிய கோபம்.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்.. பரிதாபம்
புவனேஸ்வர்: சரியாக படிக்காமல் ஊர் சுற்றி வந்த தனது தம்பியை அவரது அண்ணன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகனான பிஸ்வமோகன் எம்பிஏ படித்து முடித்துவிட்டு, வங்கித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார். இளைய மகனான ராஜ்மோகன், மேற்படிப்பு படிப்பதற்காக புவனேஸ்வரில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

போதைப்பழக்கத்துக்கு அடிமை
இதனிடையே, ராஜ்மோகன் வீட்டைவிட்டு சென்று நண்பர்களுடன் தங்கியதில் இருந்து, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் அவர் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார். அதுமட்டுமல்லாமல், தனது தந்தைக்கு அடிக்கடி ஃபோன் செய்து தனக்கு பணம் அனுப்பிவிடுமாறும் கூறி ராஜ்மோகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்படி தராவிட்டால், வீட்டுக்கே சென்று தந்தையின் ஏடிஎம் கார்டை கொண்டு சென்று விடுவாராம்.

கண்டித்த அண்ணன்
இதனால் தனது மூத்த மகன் பிஸ்வமோகனிடம், ராஜ்மோகனின் செயல்களை கூறி அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் தந்தை விஜய் போத்ரா. இதையடுத்து, தனது தம்பி ராஜ்மோகனை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோனில் தொடர்புகொண்ட பிஸ்வமோகன், "ஏன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறாய்" என அவர் கேட்டுள்ளார். மேலும், "இனி அப்பாவை தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு" என அவர் கூறியிருக்கிறார்.

திருந்தவில்லை..
ஆனாலும், தனது சேஷ்டைகளை ராஜ்மோகன் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து, தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டும், கல்லூரிக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிஸ்வமோகன், நேற்று மதியம் தனது தம்பி ராஜ்மோகனுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று இரவு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அடித்துக் கொலை
அப்போது, ஏன் இப்படி போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறாய் என ராஜ்மோகனிடம் அண்ணன் பிஸ்வமோகன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில், வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து தம்பி ராஜ்மோகனை பிஸ்வமோகன் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து, பிஸ்வமோகனை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications