For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் 50 ஆண்டு பழைய பாலம் சரிந்து விழுந்தது.. 5 பேர் பலி.. பலர் படுகாயம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து-வீடியோ

    கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பழைய மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கொல்கத்தா புறநகர் பகுதியில் தராடலா அருகே மேமின்பூர்- தராடலா இடையே ஒரு மேம்பாலம் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் இன்று சரிந்து விழுந்தது.

    Old Flyover in Kolkatta collapsed as it fears many people dead

    பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தவர்களும், மேலே போய்க் கொண்டிருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கினர். கார், மினி பஸ், இரு சக்கர வாகனங்கள் ஆகியன இடிபாடுகளுக்குள் சிக்கின. இதில் 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    Old Flyover in Kolkatta collapsed as it fears many people dead

    பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மேம்பாலத்தை சரியாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

    English summary
    An Old flyover which connects Mominpur-Taratala Collapsed and many people fear dead.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X