மாடல் அழகிக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுத்த சர்ச்சை சாமியார்! : இணையத்தில் வைரலாகும் வீடியோ
டெல்லியை சேர்ந்த சர்ச்சை சாமியார் ஓம் ஸ்வாமி மாடல் அழகி ஒருவருக்கு டாப்லெஸ் யோகா சொல்லக்கொடுக்கும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சாமியார் ஓம் ஸ்வாமி பெண் மாடல் ஒருவருக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு பிரபலங்கள் பங்குபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் டெல்லியை சேர்ந்த ஓம் ஸ்வாமியும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து ஓம் ஸ்வாமியின் அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கதவை உடைத்தது, லோபா என்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது மற்றும் பொருட்களை திருடுவது என எல்லை மீறி நடந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்த ஸ்வாமி ஓம் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரை சக போட்டியாளர்கள் மீது தெளித்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவமானம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80ஆவது நாள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்தை அவமானமாக கருதிய ஸ்வாமி உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவமானப்படுத்தி வெளியேற்றியது தான் காரணம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சல்மானை அறைந்தாரா?
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானை தான் கன்னத்தில் அறைந்ததாக கடந்த ஜனவரி மாதம் மீடியாக்களிடம் தெரிவித்து மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், ஓம் ஸ்வாமி , சல்மான் கானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கருதப்பட்டது.
கிளு கிளு நடனம்
விளம்பரப் பிரியரான ஓம் ஸ்வாமியை டிஆர்பி ரேட்டிங்கிற்காக வடஇந்திய மீடியாக்கள் அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இதனால் எப்போதும் ஏதாவது ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படத்துவதே இவரின் வேலை. கடந்த வாரம் ஓம் ஸ்வாமி தியானம் செய்வது போலவும் பிக்கினி ஆடையில் மாடல் பெண் ஒருவர் அவரை சுற்றி சுற்றி ஆடுவதைப் போல ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால் கிருஷ்ணர் கோபியர்கள் சூழ இருக்கும் போது தான் மட்டும் பெண்களுடன் இருக்கக் கூடாதா என்று தனது சர்ச்சை வீடியோவிற்கு விளக்க்ம தருகிறார் இவர்.
டாப்லெஸ் யோகா
விளம்பரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை வழக்கமாக வைத்திருக்கும் இந்த சர்ச்சை சாமியார் எல்லை மீறிய செயலாக மாடல் அழகி ஒருவரை டாப்லெஸ்ஸாக அமர வைத்து அவருக்கு யோகா சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார். இநத் வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாக பரவி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications