உமர் அப்துல்லா ரகசிய திருமணம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் 2வதாக கரம்பிடித்த பெண் பத்திரிகையாளர் யார்? பின்னணி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை 2வது திருமணம் செய்துள்ளார். திடீரென்று நடந்த இந்த திருமணம் தற்போது பேசும் பொருளாகி உள்ள நிலையில் உமர் அப்துல்லாவின் மனைவி நிதி ரஸ்தான் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் உமர் அப்துல்லா திடீரென்று 2வது திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் மிகவும் ரகசியமாக நேற்று நடந்து முடிந்துள்ளது. உமர் அப்துல்லா பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை கரம்பிடித்துள்ளார்.
உமர் அப்துல்லாவின் திருமணம் நேற்று நடந்து இருந்தாலும் அதுபற்றி யாருக்கும் தெரியவில்லை. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் உமர் அப்துல்லாவின் பெற்றோராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா அவரது மனைவி மோலி, 3 சகோதரிகளும், நெருக்கமான உறவினர்களும் பங்கேற்றனர். அதேபோல் பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தான் தரப்பில் அவரது தந்தை எம்கே ரஸ்தான், தாய் சரளா ரஸ்தான் ஆகியோர் பங்கேற்றுனர்.
இந்நிலையில் தான் தனது திருமணம் பற்றி இன்று உமர் அப்துல்லா மற்றும் பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தான் ஆகியோர் பொதுவெளியில் முறைப்படி அறிவித்தனர். இததொடர்பாக உமர் அப்துல்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ''புதிய பயணம் நேற்று முதல் தொடங்கியது'' என்று கூறி நிதி ரஸ்தானை டேக் செய்துள்ளார். அதேபோல் நிதி ரஸ்தான், ''Its done Bro'' என்று கூறி உமர் அப்துல்லாவை டேக் செய்து இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
உமர் அப்துல்லா மற்றும் நிதி ரஸ்தான் ஆகியோருக்கு இது 2வது திருமணமாகும். உமர் அப்துல்லாவை கரம் பிடித்துள்ள பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானுக்கு வயது 49 ஆகிறது. இவர் ஜம்மு காஷ்மீரின் புத்காம் பகுதியில் பிறந்தவர். என்டிடிவி ஆங்கில ஊடகத்தில் பத்திரிகையாளராகவும், தொகுப்பாளராகவும் வலம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதன்பிறகு ராஜினாமா செய்தார். அதன்பிறகு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த நிலையில் உமர் அப்துல்லாவை கரம் பிடித்துள்ளார்.
அதேபோல் உமர் அப்துல்லாவிற்கும் இது 2வது திருமணம் ஆகும். இவரது முதல் மனைவியின் பெயர் பாயல் அப்துல்லா இருவருக்கும் கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் . இவர்கள் 2 பேர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2009ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையில் அவரது மனைவி பாயல் அப்துல்லா தனது 2 மகன்களுடன் டெல்லியில் வசிக்க தொடங்கினர்.
உமர் அப்துல்லா சார்பில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜூலை மாதம் உமர் அப்துல்லா - பாயல் அப்துல்லா தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த 3 மாதத்தில் உமர் அப்துல்லா, நிதி ரஸ்தானை கரம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
