தடுப்பூசி பொதுவானது... எக்கட்சிக்கும் சொந்தமானது அல்ல...அகிலேஷ் யாதவுக்கு, உமர் அப்துல்லா பதிலடி!
ஸ்ரீநகர்: எந்தவொரு தடுப்பூசியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவை அல்ல என்றும் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.
பாஜகவின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியாது என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறிய நிலையில் உமர் அப்துல்லா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதிகமான மக்கள் தடுப்பூசியை பெறும்போது, அது நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது எனவும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

விரைவில் தடுப்பூசி
இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டு வர விரைவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒத்திகை நடந்தது. நாட்டின் மக்கள் கொரோனா தடுப்பூசியை எதிர்பார்த்து உள்ள நிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியாது என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது பாஜக தடுப்பூசி
இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ''இப்போது நான் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன். பாஜக அரசை எப்படி நம்ப முடியும். மாநிலத்தில் நாங்கள் ஆட்சியமைக்கும் போது அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம். பாஜகவின் தடுப்பூசியை எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

நாட்டுக்கு நல்லது
அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:- மிகவும் சீர்குலைவை உண்டாக்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தடுப்பூசி இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும். தடுப்பூசியை அதிகமான மக்கள் பெறுவார்கள். அதிகமான மக்கள் தடுப்பூசியை பெறும்போது அது நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது.

எந்த கட்சிக்கும் சொந்தமானதல்ல
எந்தவொரு தடுப்பூசியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவை அல்ல. அவை மனிதகுலத்தைச் சேர்ந்தவை. விரைவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் தடுப்பூசி போடுவது மிகவும் சிறந்தது. எனக்கு வேறு யாரையும்(அகிலேஷ் யாதவ்) பற்றி தெரியாது. என் முறை வரும்போது நான் மகிழ்ச்சியுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று உமர் அப்துல்லா கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications