ஓமைகாட்!: ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு வந்த சல்மான் கான், ஷாருக்கான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டு சந்தையில் விற்பனைக்கு வந்த இரண்டு ஆடுகளின் பெயர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள ஆட்டுச் சந்தைகளில் வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் லக்னோவில் உள்ள ஆட்டுச் சந்தைகளில் விற்கப்படும் ஆடுகளுக்கு பிரபல நடிகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
குண்டாக பெரியதாக இருக்கும் ஆட்டிற்கு சல்மான் கான் எனவும், கருப்பு நிற ஆடு ஒன்றுக்கு ஷாருக்கான் என்றும் பெயர் வைத்துள்ளனர். பிரபலங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ள ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆடுகளுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தவிர்த்து பிரபல விளையாட்டு வீரர்களின் பெயர்களையும் வைத்துள்ளனர். ஒரு ஆட்டிற்கு சானியா மிர்சா நினைவாக சானியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜம்னாபாரி, தும்பா, அஜ்மீரி வகை ஆடுகளுக்கு தான் படுகிராக்கியாக உள்ளது. சஜித் என்பவர் தான் பார்த்து பார்த்து வளர்த்த 125 கிலோ ஆட்டிற்கு தனக்கு பிடித்த இனிப்பு வகையான பர்ஃபியின் பெயரை வைத்துள்ளார்.
லக்னோவில் உள்ள சதத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவரின் ஆட்டின் உடம்பில் இயற்கையாகவே நட்சத்திரம் மற்றும் நிலா வடிவம் இருப்பதால் அதன் விலை ரூ.2 லட்சம் ஆகும். மேலும் அல்லாஹ் என்ற வார்த்தை உடலில் உள்ள அதிசய ஆட்டின் விலை ரூ.5 லட்சம் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications