ஸ்வச் பாரத் போல குற்றமில்லா இந்தியாவை மோடி உருவாக்க வேண்டும்: நிர்பயாவின் தாய்
டெல்லி: சுத்தமான இந்தியா போன்று குற்றமில்லா இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி ஏதாவது திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன் என நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிசியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அதே ஆண்டு டிசம்பர் 29ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.

நிர்பயா இறந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நிர்பயாவின் தாய் கூறுகையில்,
நம் சமூகத்தில் வலுவான மாற்றம் ஏற்பட வேண்டும். பெரும்பாலான பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகள் உறவினராகவோ, நண்பராகவோ, தெரிந்தவராகவோ இருக்கிறார்கள். சமூகத்தின் மனநிலை மாறாதவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாது. இது போன்ற வழக்குகளில் சட்டம் கடுமைாக இருக்க வேண்டும்.
சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது தான் அரசிடம் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பது. மைனர்களை தண்டிக்க முடியாது என்பதால் அவர்கள் துணிச்சலுடன் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். பெண் டாக்டர் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் மைனர். சுத்தமான இந்தியா போன்று குற்றமில்லா இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி ஏதாவது திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications