"மோடிக்கு அதிர்ச்சி!" ஒரே நாளில் ஜகா வாங்கிய 2 பாஜக வேட்பாளர்கள்! அதுவும் குஜராத்தில்.. என்ன நடந்தது
காந்திநகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் ஒரே நாளில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பாஜகவின் வேட்பாளர்கள் பெயர்களை மோடி தலைமையிலான கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அதன் பின்னரே அறிவிக்கப்படும். இதற்கிடையே இன்று ஒரே நாளில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விலகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விலகல்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதராவில் லோக்சபா எம்பியாக இருக்கும் ரஞ்சன் பட் மீண்டும் இந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்தச் சூழலில் திடீரென அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் எனது தனிப்பட்ட காரணங்களால் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். வதோதரா தொகுதியில் ரஞ்சன் பட் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவரது தொகுதியில் அதிருப்தி காணப்பட்டது. பல இடங்களில் ரஞ்சன் பட்டிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து பேனர்களை வைக்கப்பட்டது.
என்ன காரணம்: சில உள்ளூர் பாஜக தலைவர்களும் பட்டிற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டதற்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பாஜகவின் தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவர் ஜோதிபென் பாண்டியா, கட்சியில் இருந்தும், அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்திருந்தார். அந்தளவுக்கு அவர் மீது அதிருப்தி இருந்தது. இந்தச் சூழலில் தான் அவர் இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி குஜராத்தின் வதோதரா மற்றும் உபி மாநிலம் வாரணாசி என இரு தொகுதிகளில் இருந்து போட்டியிட்டார். இரண்டிலும் மோடி வென்ற நிலையில், சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதியின் எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கே நடந்த இடைத்தேர்தலில் பட் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2019இல் நடந்த லோக்சபா தேர்தலிலும் ரஞ்சன் பட் வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வேட்பாளர்: அதேபோல சபர்கந்தா லோக்சபா தொகுதிக்கான பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பிகாஜி தாக்கூர் என்பவரும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். தனிப்பட்ட காரணங்களால் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். அவரது சாதி தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது வட இந்தியாவில் பொதுவாக அனைவரும் தங்கள் பெயருடன் சாதிப் பெயரை இணைத்துக் கொள்வார்கள். ஆனால் முன்பு டாமோர் என்ற சாதிப் பெயரை பின்னால் வைத்திருந்த இவர் சமீபத்தில் தான் தாக்கூர் எனத் தனது பெயரை மாற்றினார். இதனால் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. ஏனென்றால் இவர் போட்டியிடும் சபர்கந்தா தொகுதியில் தாகூர் வாக்காளர்கள் அதிகம். அவர்களைக் கவரும் வகையிலேயே இவர் தனது பெயரை மாற்றியதாகச் சர்ச்சை எழுந்தது.
டெலிட்: இந்தச் சூழலில் தான் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளங்களில் இந்தியில் பதிவிட்டு இருந்தார். இருப்பினும், சில நிமிடங்களிலேயே அவர் தனது போஸ்டை டெலிட் செய்துவிட்டார். இதனால் அவர் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications