ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவரை தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் மன்வீந்தர் சிங்கை பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் அடையாளம் தெரியவந்துள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் அம்மாணவர் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து அவர்களுடன் பேசி வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications