OneIndia Exclusive: ஹேமந்த் சோரன் பக்கம் சாயும் முஸ்லிம் வாக்காளர்கள்.. ஜார்க்கண்ட் களநிலவரம் என்ன?
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நமது ஒன் இந்தியா நடத்திய கள ஆய்வில், அங்குள்ள முஸ்லீம்கள் ஹேமந்த் சோரின் ஜேஎம்எம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இது எதிர்வரும் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்றே தெரிகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. பாஜக அங்குப் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.

ஜார்க்கண்ட் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இப்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
ஜார்கண்ட் தேர்தல்: ராஞ்சி முஸ்லீம் சமூகத்தினர் ஜார்கண்ட் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியுள்ளனர். அங்குள்ள முஸ்லீம் சமூகத்தினர் ஆளும் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஒன்இந்தியா நடத்திய கள ஆய்வு தொடர்பாக நாம் பார்க்கலாம்.
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே அதிருப்தி இருக்கவே செய்கிறது.. அதேநேரம் மறுபுறம் முஸ்லிம் சமூகத்தினர் பலரும் ஹேமந்த் சோரனின் மீது நம்பிக்கை இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.. சமூகப் பாதுகாப்பு, சிறுபான்மை நலனில் அவரது அரசு எடுத்துள்ள நிலைப்பாடுகள் என ஹேமந்த் சோரனின் கொள்கைகள் அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினரைக் கவர்ந்துள்ளது.
ஏன் முக்கியம்: ஜார்க்கண்டில் மொத்தம் 3.5 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 20% முஸ்லீம்கள் ஆவர். இதனால் தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முகமது ஃபரீத் கான் என்ற வாக்காளர் கூறுகையில், "இந்த தேர்தலில் ஜேஎம்எம் வெல்லவே வாய்ப்புகள் அதிகம். ஹேமந்த் சோரன் அரசின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எங்கள் தொகுதியில் (ராஞ்சி) ஜேஎம்எம் சார்பில் மஹுவா மாஜி போட்டியிடுகிறார். நிச்சயம் அவருக்கு அனைத்து சமூகத்தினரும் ஆதரவு அளிப்பார்கள். இப்போது இங்கு பாஜகவின் சி.பி. சிங் எம்எல்ஏவாக இருக்கிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள் எதுவும் சிறப்பாக இல்லை. நகரின் உள்கட்டமைப்பு மிக மோசமாகப் போய்விட்டது" என்றார்.
மக்கள் நிலைப்பாடு: அதேபோல பாபர் என்ற மற்றொரு வாக்காளராகும் ஹேமந்த் சோரன் அரசு சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மத்தியில் உள்ள மோடி அரசை அவர் கடுமையாகச் சாடினார். பாபா மேலும் கூறுகையில், "பாஜக ஜூம்லா செய்து வருகிறது. 2014 முதல் பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை..
கருப்புப் பணம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் எனப் பலவற்றைச் சொல்லலாம்.. அதேநேரம் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மக்களுக்காக உழைத்துள்ளார். அவரது திட்டங்கள் ஏழை மக்களைச் சென்றடைந்துள்ளன" என்று தெரிவித்தார். அங்கு முழுக்கவே முஸ்லிம்கள் கிட்டதட்ட இதே நிலைப்பாட்டையே எடுத்ததாகத் தெரிகிறது.
ஜார்க்கண்டில் மொத்தமாக 81 இடங்கள் உள்ள நிலையில், அங்கு 41 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த முறை நவ. 13 மற்றும் நவ. 20 என்று இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவ. 23ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications