Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘கோப்ரா போஸ்ட் ஆபரேசனில்’ சிக்கிய அதிமுக எம்.பி.க்கள் பொள்ளாச்சி சுகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் அளித்ததாக 11 எம்.பி.க்கள் மீது குற்றம்சாட்டி அது தொடர்பான ஆதாரங்களை 'கோப்ரா போஸ்ட்' இணைய தளம் வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. பொள்ளாச்சி எம்.பியான கே. சுகுமார், தென் சென்னை எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரும் இதில் சிக்கி உள்ளனர்.

'கோப்ரா போஸ்ட்' இணைய தளத்தை சேர்ந்த நிருபர்கள் 11 எம்.பி.க்களிடம், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 'மெடிட்டெர்ரனேன் ஆயில்' என்ற இல்லாத ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி, அந்த நிறுவனத்திற்கு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் துறப்பன பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை பெற பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு சிபாரிசு அளிக்க கோரும் கடிதத்தை தர முடியுமா? எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்த எம்.பி.க்கள் பணம் பெற்றுக்கொண்டு ( ரூ. 50,000 முதல் 5 லட்சம் வரை) பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு சிபாரிசு கடிதம் அளித்துள்ளனர்.

கோப்ரா போஸ்ட்

கோப்ரா போஸ்ட்

பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன் தாங்களே பேசி அதனை முடித்து தருவதாகவும் சில எம்.பி.க்கள் ஒப்புக்கொண்டதாகவும் 'கோப்ரா போஸ்ட்' இணைய தளம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான வீடியோ மற்றும் கடித ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி சுகுமார்:

பொள்ளாச்சி சுகுமார்:

பொள்ளாச்சி அதிமுக எம்பி சுகுமாரை கோப்ராபோஸ்ட் நிருபர், பெட்ரோலிய நிறுவன லாபியிஸ்ட் என்ற பெயரில் சந்திக்கிறார். அவரிடம் முதல் ரவுண்டில் பேசும்போது லெட்டர் தர ரூ. 50,000 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் சுகுமாரை நேரில் சந்திக்கும் நிருபரிடம் லெட்டரைத் தருகிறார் எம்பி. பதிலுக்கு ஒரு பிரவுன் கவரில் வைத்து ரூ. 50,000 தரப்படுகிறது. இது ரகசிய வீடியோவில் பதிவாகியுள்ளது.

சிக்கிய சிட்லபாக்கம் ராஜேந்திரன்

சிக்கிய சிட்லபாக்கம் ராஜேந்திரன்

அ.தி.மு.க. தென் சென்னை எம்.பியான சிட்லபாக்கம் ராஜேந்திரனை அவரது வீட்டுக்கு நாயர் என்ற ஏஜென்ட் அழைத்துச் செல்கிறார். ஆனால், நேரில் எம்பி காசு வாங்க மாட்டார் என்றும், பணத்தை தன்னிடம் தரச் சொன்னதாகவும் எம்பி வீட்டில் உள்ள நபர் சொல்கிறார். ஆனால், நேரில் பார்த்துத் தான் தருவேன் என்று சொல்லிவிட்டு நாயருக்கு கமிஷன் தொகையை தந்துவிட்டுத் திரும்புகிறார் நிருபர்.

மாலையில் மீண்டும் சந்திப்பு..

மாலையில் மீண்டும் சந்திப்பு..

பின்னர் மாலையில் மீண்டும் எம்பியை நேரில் சந்திக்கும் அந்த நிருபர் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் சார், பரிந்துரை கடிதத்துக்கு காசு கேட்கிறார்.. என்று கூற குடுங்க என்கிறார் எம்பி. எவ்வளவு சார் என்று கேட்டவுடன் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு கோபம் வருகிறது. எழுந்து சென்றுவிடுகிறார். இதையடுத்து அவரது பி.ஏ மார்ட்டின், எங்க சார் நேரில் இதில் தலையிட மாட்டார். நாங்க சொன்னா நம்பனும். காசை குடுங்க என்கிறார். இதையடுத்து எம்பி முன்னிலையிலேயே ரூ. 50,000 தரப்படுகிறது. இதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

பாஜக, காங்கிரஸ்...

பாஜக, காங்கிரஸ்...

இதே போல பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவர், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 3 பேர் என 11 எம்.பி.க்கள் சிக்கியுள்ளனர்.

பணத்திற்கு சிபாரிசு

பணத்திற்கு சிபாரிசு

இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் பணம் கொடுத்தால் எத்தகைய சிபாரிசு கடிதங்களையும் அளிக்க நமது எம்.பி.க்கள் தயாராக உள்ளதையும், கேட்கும் கோரிக்கையின் உண்மைத் தன்மை குறித்து அவர்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதையே இது காட்டுவதாக உள்ளது என்றும் அந்த இணைய தளம் கூறியுள்ளது.

உளவு ரகசியம்

உளவு ரகசியம்

'கோப்ரா போஸ்ட்' இணைய தளம் ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. பெண் ஒருவரை பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி உளவு பார்க்க சொன்னதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான செய்தியையும் இந்த தளம்தான் முதலில் வெளியிட்டது.

கருப்பு பணம்

கருப்பு பணம்

மேலும் பல்வேறு தனியார் வங்கிகள், கறுப்பு பணம் வைத்திருப்பவர்களிடம் அதனை வெள்ளையாக மாற்றித்தருவதற்கு சம்மதித்த தகவலையும் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக எம்.பிக்கள் மறுப்பு

அதிமுக எம்.பிக்கள் மறுப்பு

இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டை அ.தி.மு.க. எம்.பி.க்கள் இருவரும் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் காரியங்களுக்காக தங்களிடம் சிபாரிசு கோரி வருபவர்களுக்கு எம்.பி.க்கள் இதுபோன்று சிபாரிசு கடிதம் அளிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், ஆனால் பணம் வாங்கிக் கொண்டு சிபாரிசு கடிதம் அளித்ததாக கூறும் 'கோப்ரா போஸ்ட்' இணைய தளம், அது தொடர்பான அதாவது பணம் பெறுவது போன்ற விடியோ காட்சிகளை வெளியிடவில்லை என்றும், கடிதங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எம்.பி.க்களிடம் பேசுவது போன்ற காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டை மறுக்கும் சில எம்.பி.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+