தமிழகத்திற்கான நீரில் ஒரு லிட்டர் கூட குறைக்க மாட்டோம்... கேரள முதல்வர் உம்மன் சாண்டி உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறிலிருந்து அளிக்க வேண்டிய நீரில் ஒரு லிட்டரைக் கூட குறைக்கமாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி உறுதியளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஓராண்டில் 10 சதவிகித மதுக்கடைகளை கேரள அரசு மூடியுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 10 சதவிகித மதுக்கடைகள் மூடப்படும் என்றார்.

10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். தமிழகத்துடன் நெருங்கிய நட்புறவை தொடரவே, கேரள அரசு விரும்புவதாகவும் உம்மன் சாண்டி குறிப்பிட்டார்.
எனவே முல்லைப் பெரியாறிலிருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரில் ஒரு லிட்டர் கூட குறைக்கப்படாது என்றும் உம்மன் சாண்டி உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications