உம்மன் சாண்டி எனக்கு அப்பா மாதிரி, அவரோடு போய் நான்...: சரிதா நாயர்
திருவனந்தபுரம்: சோலார் பேனல் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் கூறுவது போன்று எந்த சி.டி.க்களும் அவரிடம் இல்லை என்றும், கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனக்கு தந்தை போன்றவர் என்றும் அதே வழக்கில் கைதான தொழில் அதிபர் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் ஊழல் வழக்கு குறித்து விசாரித்து வரும் ஆணையம் முன்பு அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஆணையத்திடம் தனது வாக்குமூலத்தை அளித்தார்.
அவரது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

உம்மன் சாண்டி
சோலார் பேனல் ஊழல் வழக்கில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் சி.டி.க்கள் தன்னிடம் உள்ளதாக பிஜு தெரிவித்துள்ளார். 10 மணிநேரம் கால அவகாசம் அளித்தால் அந்த சி.டி.க்களை எடுத்து வந்து ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சரிதா நாயர்
உம்மன் சாண்டி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், அரசியல் தலைவர்கள் ஹிபி ஈடன், அரயதன் சவுகத், ஏ.பி. அனில் குமார், அவரின் உதவியாளர் நஸ்ருல்லா ஆகியோரும் சரிதாவிடம் இருந்து பாலியல் சுகம் பெற்றுள்ளனர் என்று பிஜு மேலும் கூறினார்.

மறுப்பு
உம்மன் சாண்டி எனக்கு தந்தை போன்றவர். மேலும் அரயதன் சவுகத்தை நான் சந்தித்ததே இல்லை. சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரிக்கும் ஆணையம் முன்பு ஆஜராகி அனைத்து விபரங்களையும் தெரிவிக்க உள்ளேன் என்று சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

சி.டி.
பிஜு ராதாகிருஷ்ணன் தன்னிடம் சி.டி.க்கள் இருப்பதாக கூறுவது பொய். அவரிடம் எந்த சி.டி.யும் இல்லை. இருந்தால் அவற்றை வெளியிடட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என்கிறார் சரிதா நாயர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications